பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருணுக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததா? பெண் இவர் தானா?

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தொடர்களில் பாரதி கண்ணம்மா தொடர் எப்போதும் டிஆர்பியில் இடம் பெற்றுவிடும். இதில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் அனைவரும் மிக பேமஸ். இதற்கு பிறகு, பிரபலமான தொடர்களின் வரிசையில் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், ராஜா ராணி 2.
இந்த தொடரில் கதாநாயகனாக நடித்து வருபவர் அருண் பிரசாத்திற்கு கடந்த வருடம் சிறந்த கதாநாயகன் விருது கிடைத்தது. இத்தொடரில் முதலில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி ஹரிப்ரியன், சில பல கமிட்மென்ட் காரணமாக இத்தொடரை விட்டு வெளியேறிவிட்டார். அவருக்கு பதிலாக, வினுஷா ரோஷினி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அருண் பிரசாத் காதல் பற்றிய தகவல் இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வந்தது. விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல் தொடர் வில்லியான அர்ச்சனாவுக்கு இம்முறை விஜய் விருது கிடைத்தது. அப்போது அவரை தொகுப்பாளர்கள் பாரதி, டாக்டர், DNA போன்ற விஷயங்களை கூறி கூறி கிண்டல் செய்தார்கள்.
இதனால், அருண் பிரசாத் மற்றும் அர்ச்சனா இருவரும் காதலிக்கிறார்களா என்ற பேச்சு மக்களிடம் எழுந்தது. அருண் பிரசாத் மற்றும் அர்ச்சனா ஒன்றாக இருக்கும் சில வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வந்தது.
சமீபகாலமாக, நடிகர் அருண் பிரசாத்திற்கு விரைவில் திருமணம் என செய்திகள் வந்த நிலையில், அவருக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
அவருக்கும் ராஜா ராணி 2 தொடரில் வில்லியாக நடிக்கும் அர்ச்சனாவுக்கும் நிச்சயதார்த்தம் சீக்ரெட்டாக முடிந்துவிட்டதாக தெரிவிக்கின்றனர். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.