பிரபல சீரியலை அப்பட்டமாக காப்பி அடித்த விஜய் டிவி? பாரதி கண்ணம்மா'ல இத கவனிச்சீங்களா?
விஜய் தொலைக்காட்சியில் நிறைய சீரியல்கள் மத்த சேனல்களை பின் தள்ளி டிஆர்பி ரேஸில் முதல் 5 இடங்களில் பிடித்து வருவது வழக்கம். அப்படி பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியலில் பாரதி கண்ணம்மா தொடர் டாப் இடத்தில் இருந்து வந்தது. இல்லத்தரசிகள் பேவரைட் ஆக மாறிய இத்தொடர், ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
டிஆர்பியில் டாப் இடத்தை பிடித்து வரும் சீரியல் தொடர் பாரதி கண்ணம்மா. இதில் தொடரில் கதாநாயகனாக நடித்து வருபவர் அருண் பிரசாத்திற்கு கடந்த வருடம் சிறந்த கதாநாயகன் விருது கிடைத்தது. இத்தொடரில் முதலில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி ஹரிப்ரியன், சில பல கமிட்மென்ட் காரணமாக இத்தொடரை விட்டு வெளியேறிவிட்டார். அவருக்கு பதிலாக, வினுஷா ரோஷினி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது 900 எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. பரபரப்பாக ஓடி டிஆர்பியில் முன்னணியில் இருந்து வந்த இந்த தொடர், தற்போது மோசமான விமர்சனங்களை அதிகம் பெற்று வருகிறது. ஒரே கதையை சஸ்பென்ஸ் என்ற பெயரில் ஜவ்வு போல இழுத்து வருவதாக ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இந்த சீரியலை எப்போ தான் முடிப்பீங்க என நெட்டிசன்களே தினமும் கேட்கும் அளவுக்கு சீரியல் சென்றுகொண்டிருக்கிறது. சீரியலில் ஹேமா வேடத்தில் நடித்து வரும் லிசா சீரியல் இயக்குனர் அகிலன் அஞ்சலி உளிட்டோருடன் இணைந்து வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோவில் மக்கள் சீரியலை எப்படா முடிப்பீங்க என கேட்கிறாங்க ஆனால் எங்களுக்கு எண்டே கிடையாது என கூறுவது போல தெரிவித்திருந்தனர்.
தற்போது, ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்த பாரதியின் டிஎன்ஏ ரிசல்ட் வந்துவிடவே, பாரதி உண்மையை தெரிந்து கொள்கிறார். எனவே கண்ணம்மாவின் காலில் விழுந்தாவது அவரிடம் மன்னிப்பு கேட்டு, தன்னுடைய மகள்களான லட்சுமி மற்றும் ஹேமாவுடன் சேர்ந்து வாழ துடிக்கும் பாரதி, டெல்லியில் இருந்து கண்ணம்மாவை சந்திக்க செல்கிறார்.
இதை அடுத்து பாரதியும் கண்ணம்மாவும் ஒன்று சேர்வார்கள், சீரியலுக்கு சுபம் போடுவார்கள் என எதிர்பார்த்த நிலையில் கடைசியில் கண்ணம்மா பாரதி ஏற்க மறுத்தார். இப்படியான நிலையில், ஹேமாவும் லட்சுமியும் உன்னை தப்பா பேசினவர்கள் யாரும் நமக்கு வேண்டாம் நாம எங்கேயாவது போயிடலாம் என சொல்ல மூவரும் ஊரை விட்டு கிளம்புகின்றனர். இந்த பக்கம் கண்ணம்மாவை தேடி வீட்டுக்கு வரும் பாரதி வீட்டில் யாரும் இல்லாததை பார்த்து கண்ணம்மாவை நான் எங்கே போய் தேடுவேன் என புலம்புகிறார்.
இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தெய்வம் தந்த பூவே சீரியலை போலவே இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். முதலில் தெய்வம் தந்த பூவே சீரியல் பாரதி கண்ணம்மா சீரியல் ட்ராக்கில் செல்வது போல இருந்த நிலையில் அடுத்து அந்த சீரியல் நாயகி மித்ரா தனது குழந்தைக்கு வினய் தான் அப்பா என்பதை நிரூபித்து விட்டு வீட்டை விட்டு வெளியேறி கண் காணாத இடத்துக்கு சென்றார். அதே போல் தற்போது கண்ணம்மா பாரதியை வேண்டாம் என தூக்கி போட்டு கண் காணாத இடத்துக்கு போவது போல கதைக்களம் நகர இருப்பதாக தெரியவந்துள்ளதால் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.