படுமோசமாக போய் கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா.. புது ப்ரோமோவால் கழுவி ஊற்றும் ரசிகர்கள்.. வைரல் வீடியோ !

bharathi kannamma promo video trolled by netizens getting viral

விஜய் தொலைக்காட்சியில் நிறைய சீரியல்கள் மத்த சேனல்களை பின் தள்ளி டிஆர்பி ரேஸில் முதல் 5 இடங்களில் பிடித்து வருவது வழக்கம். அப்படி பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியலில் பாரதி கண்ணம்மா தொடர் டாப் இடத்தில் இருந்து வந்தது. இல்லத்தரசிகள் பேவரைட் ஆக மாறிய இத்தொடர், ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

bharathi kannamma promo video trolled by netizens getting viral

டிஆர்பியில் டாப் இடத்தை பிடித்து வரும் சீரியல் தொடர் பாரதி கண்ணம்மா. இதில் தொடரில் கதாநாயகனாக நடித்து வருபவர் அருண் பிரசாத்திற்கு கடந்த வருடம் சிறந்த கதாநாயகன் விருது கிடைத்தது.

bharathi kannamma promo video trolled by netizens getting viral

இத்தொடரில் முதலில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி ஹரிப்ரியன், சில பல கமிட்மென்ட் காரணமாக இத்தொடரை விட்டு வெளியேறிவிட்டார். அவருக்கு பதிலாக, வினுஷா ரோஷினி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

bharathi kannamma promo video trolled by netizens getting viral

பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது 900 எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. பரபரப்பாக ஓடி டிஆர்பியில் முன்னணியில் இருந்து வந்த இந்த தொடர், தற்போது மோசமான விமர்சனங்களை அதிகம் பெற்று வருகிறது. ஒரே கதையை சஸ்பென்ஸ் என்ற பெயரில் ஜவ்வு போல இழுத்து வருவதாக ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

bharathi kannamma promo video trolled by netizens getting viral

இந்த சீரியலை எப்போ தான் முடிப்பீங்க என நெட்டிசன்களே தினமும் கேட்கும் அளவுக்கு சீரியல் சென்றுகொண்டிருக்கிறது. தீவிரவாதிகளின் பிடியில் இருந்து கண்ணம்மா பாரதியை காப்பாற்றியதால் இருவதும் ஒன்று சேருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசியில் அதுவும் இல்லாமல் வெண்பா ரோகித்தால் கர்ப்பமான நிலையில் அந்த குழந்தைக்கு பாரதியை அப்பாவாக்க முயற்சி செய்ய வெண்பா திட்டமிட்டுள்ளார்.

bharathi kannamma promo video trolled by netizens getting viral

அதற்காக திட்டம் போட்டு விஷம் குடித்த நிலையில் பாரதி அவளை காப்பாற்ற என்னை எதுக்கு காப்பாற்றின, நான் திரும்பவும் சாக தான் போறேன் என சொல்ல பாரதி உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன் என வாக்கு கொடுப்பது போன்ற ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

bharathi kannamma promo video trolled by netizens getting viral

உனக்கு பொறந்த குழந்தைக்கு அப்பாவாக இருக்க முடியாதுன்னு சொல்ற, ஒரு டி என் ஏ டெஸ்ட் எடுக்க மனசு வரல, ஆனா யாரோ பெத்த குழந்தைக்கு அப்பாவாக போறியா? இதெல்லாம் ஒரு சீரியலா என பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர். இதுக்கெல்லாம் ஒரு எண்டு கார்டே கிடையாதா இயக்குனரே?? என நெட்டிசன்கள் கண்டமேனிக்கு கலாய்த்து வருகின்றனர்.

Share this post