'சிவன் இல்லாம சக்தி இருக்க முடியும்.. Single Mothers சிங்கப்பெண்கள் மாதிரி' - கண்ணம்மா பதிலடி..

விஜய் தொலைக்காட்சியில் நிறைய சீரியல்கள் மத்த சேனல்களை பின் தள்ளி டிஆர்பி ரேஸில் முதல் 5 இடங்களில் பிடித்து வருவது வழக்கம். அப்படி பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியலில் பாரதி கண்ணம்மா தொடர் டாப் இடத்தில் இருந்து வந்தது. இல்லத்தரசிகள் பேவரைட் ஆக மாறிய இத்தொடர், ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
டிஆர்பியில் டாப் இடத்தை பிடித்து வரும் சீரியல் தொடர் பாரதி கண்ணம்மா. இதில் தொடரில் கதாநாயகனாக நடித்து வருபவர் அருண் பிரசாத்திற்கு கடந்த வருடம் சிறந்த கதாநாயகன் விருது கிடைத்தது. இத்தொடரில் முதலில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி ஹரிப்ரியன், சில பல கமிட்மென்ட் காரணமாக இத்தொடரை விட்டு வெளியேறிவிட்டார். அவருக்கு பதிலாக, வினுஷா ரோஷினி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது 900 எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. பரபரப்பாக ஓடி டிஆர்பியில் முன்னணியில் இருந்து வந்த இந்த தொடர், தற்போது மோசமான விமர்சனங்களை அதிகம் பெற்று வருகிறது. ஒரே கதையை சஸ்பென்ஸ் என்ற பெயரில் ஜவ்வு போல இழுத்து வருவதாக ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இந்த சீரியலை எப்போ தான் முடிப்பீங்க என நெட்டிசன்களே தினமும் கேட்கும் அளவுக்கு சீரியல் சென்றுகொண்டிருக்கிறது. சீரியலில் ஹேமா வேடத்தில் நடித்து வரும் லிசா சீரியல் இயக்குனர் அகிலன் அஞ்சலி உளிட்டோருடன் இணைந்து வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோவில் மக்கள் சீரியலை எப்படா முடிப்பீங்க என கேட்கிறாங்க ஆனால் எங்களுக்கு எண்டே கிடையாது என கூறுவது போல தெரிவித்திருந்தனர்.
ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்த பாரதியின் டிஎன்ஏ ரிசல்ட் வந்துவிடவே, பாரதி உண்மையை தெரிந்து கொள்கிறார். எனவே கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்டு, தன்னுடைய மகள்களான லட்சுமி மற்றும் ஹேமாவுடன் சேர்ந்து வாழ துடித்த பாரதியும் கண்ணம்மாவும் ஒன்று சேர்வார்கள், சீரியலுக்கு சுபம் போடுவார்கள் என எதிர்பார்த்த நிலையில் கண்ணம்மா ஏற்க மறுத்தார்.
இப்படியான நிலையில், இந்நிலையில், மேலும், கண்ணம்மாவின் விருப்பத்தின் பெயரில், பாரதி மற்றும் கண்ணம்மா இருவருக்கும் விவாகரத்து கொடுக்கப்பட்டது. எனினும் குழந்தைகள் விருப்பப்பட்டால் பாரதியை பார்க்க அனுமதி கொடுக்கப்பட்டுவிட்டது. கிராமத்தில் நடக்கும் தற்போதைய எபிசோடுகளில் பாரதி கண்ணம்மாவை பல வழிகளில் சந்தித்தும் பேசியும் சமாதானம் பண்ணியும் வருகிறார்.
இதனிடையே லட்சுமி பாரதிக்கு தன்னுடைய ஆதரவுக் கரத்தை நீட்டி விட்டார். இதனால் பாரதி டபுள் மடங்கு எனர்ஜியுடன் கண்ணம்மாவை அவ்வப்போது காதலாக வம்பிழுத்து வருகிறார். இந்நிலையில், இதன் ஒரு அங்கமாக பரமசிவன் - பார்வதி திருவிளையாடலான சிவன் - சக்தி சண்டையை நாடகமாக போடுகிறார் பாரதி. இதில் லட்சுமி முருகர் வேடம் ஏற்கிறார்.
இதன் தொடர்ச்சியாக, சிவன் சொல்லியும் பார்வதி கேட்காமல் யாகத்துக்கு செல்ல, இதனால் சிவன் கோபித்துக்கொள்ளும் அதே கதை ஆங்கிலம் கலந்து காமெடியாகவும் சீரியஸாகவும் நாடகமாக அரங்கேறியது. இதற்கென வேறு நடிகர்கள் சிவன் - பார்வதியாக நடித்துள்ளனர். இதில் பல தற்கால பாடல்கள் பின்னணியில் ஒலிபரப்பு செய்யப்பட்டன.
இந்த நாடகம் முடிந்ததும் அனைவரும் பாரதியை வாழ்த்தினர். ஆனால் கண்ணம்மா , “பாரதியிடம் சென்று, நாடகம் நன்றாக தான் இருந்தது. ஆனால் கருத்து பழசாக இருக்கிறது. சிவனுக்கு வேண்டுமானால் சக்தி இல்லாமல் இருக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் சக்திக்கு சிவன் இல்லாமல் இருக்க முடியும். சக்திக்கு சிவன் தேவை இல்லை. சிங்கிள் மதர்ஸ் எத்தனையோ பேர் இருக்காங்க. சிங்கபெண்கள் அவங்க எல்லாம்” என சொல்லிவிட்டு போகிறார்.