பாரதி கண்ணம்மா தொடரில் இனி டாக்டர் பாரதியாக விஜய் பட நடிகர் !

Bharathi kannamma arun prasath to replace by sanjeev

விஜய் தொலைக்காட்சியில் நிறைய சீரியல்கள் மத்த சேனல்களை பின் தள்ளி டிஆர்பி ரேஸில் முதல் 5 இடங்களில் பிடித்து வருவது வழக்கம். அப்படி பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியலில் பாரதி கண்ணம்மா தொடர் டாப் இடத்தில் வந்து விடும். இல்லத்தரசிகள் பேவரைட் ஆக மாறிய இத்தொடர், ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

Bharathi kannamma arun prasath to replace by sanjeev

இத்தொடரில் முதலில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி ஹரிப்ரியன், சில பல கமிட்மென்ட் காரணமாக இத்தொடரை விட்டு வெளியேறிவிட்டார். அவருக்கு பதிலாக, வினுஷா ரோஷினி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Bharathi kannamma arun prasath to replace by sanjeev

கண்ணம்மாவின் தங்கை அஞ்சலியாக நடித்து வந்த கண்மணி மனோகரன் வேறு ஒரு சீரியலில் முன்னணி கதாநாயகியாக நடிப்பதற்காக இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார்.

Bharathi kannamma arun prasath to replace by sanjeev

இவரைத் தொடர்ந்து, அஞ்சலியின் கணவராக நடித்து வந்த அகிலன் பாரதிகண்ணம்மாவை விட்டு விலகுவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். இவ்வாறு அடுத்தடுத்து நடிகர் - நடிகைகள் மாற்றம் பாரதிகண்ணம்மா சீரியலுக்கு பெரும் அடியை கொடுத்து வந்ததோடு, டிஆர்பியிலும் பின்தங்கிவிட்டது.

Bharathi kannamma arun prasath to replace by sanjeev

இந்நிலையில், பாரதிகண்ணம்மாவில் நாயகனான பாரதியாக நடித்து வரும் அருண்பிரசாத் சீரியலில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளாராம். இந்த செய்தி ரசிகர்களை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

Bharathi kannamma arun prasath to replace by sanjeev

இந்நிலைகள் பாரதியாக நடிக்க அருண் பிரசாத்துக்கு பதிலாக தளபதி விஜயின் நண்பர் சஞ்சீவ் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இவர் பிக் பாஸ் சீசன் 5ல் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் போட்டியாளராக பங்கேற்றிருந்தார்.

Bharathi kannamma arun prasath to replace by sanjeev

இதற்கு முன்னரே, சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த திருமதி செல்வம் தொடரின் மூலம் இவர் சின்னத்திரையில் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post