'அம்மன் கண்ணில் இரத்தம்..' விஜய் டிவி சீரியல் வீடியோவை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் !

Bharathi kannamma and raja rani 2 serial mega sangamam promo video getting viral on social media

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும், சீரியல் தொடர்களும் ரசிகர்களின் பேவரைட்டாக மாறி வரவேற்பு கிடைப்பது வழக்கம். விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர்களின் வரிசையில் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், ராஜா ராணி 2. இதில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் அனைவரும் மிக பேமஸ்.

Bharathi kannamma and raja rani 2 serial mega sangamam promo video getting viral on social media

அந்த வகையில், ராஜா ராணி 2 தொடர் செம ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீசன் 1 தொடர்ந்து, ராஜா ராணி சீசன் 2 வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஐபிஎஸ் கனவுடன் இருக்கும் ஒரு பெண் தனது வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்வுகள் குறித்த கதை ஆகும்.

Bharathi kannamma and raja rani 2 serial mega sangamam promo video getting viral on social media

சந்தியா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆலியா, 2வது பிரசவத்திற்காக சீரியல் இருந்து விடுபெற்றார். அதன் பின்னர், ஆலியா மானசாவிற்கு பதிலாக ரியா அந்தகதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

Bharathi kannamma and raja rani 2 serial mega sangamam promo video getting viral on social media

மேலும், டிஆர்பியில் டாப் இடத்தை பிடித்து வரும் சீரியல் தொடர் பாரதி கண்ணம்மா. இதில் தொடரில் கதாநாயகனாக நடித்து வருபவர் அருண் பிரசாத்திற்கு கடந்த வருடம் சிறந்த கதாநாயகன் விருது கிடைத்தது. இத்தொடரில் முதலில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி ஹரிப்ரியன், சில பல கமிட்மென்ட் காரணமாக இத்தொடரை விட்டு வெளியேறிவிட்டார். அவருக்கு பதிலாக, வினுஷா ரோஷினி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Bharathi kannamma and raja rani 2 serial mega sangamam promo video getting viral on social media

டிஆர்பியில் விஜய் டிவியில் முன்னிலை வகிக்கும் ப்ரைம் டைம் சீரியல்கள் ஆனா பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 ஆகிய சீரியல்களையும் இணைத்து ஒரு மணி நேரம் ஒளிபரப்பாக போகிறது. இந்த இரண்டு சீரியல்களையும் ஏற்கனவே கடந்த வருடம் மார்ச் மாதத்தில் ஒரு முறை மகா சங்கமம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Bharathi kannamma and raja rani 2 serial mega sangamam promo video getting viral on social media

அந்த எபிசோடுகள் அனைத்தும், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று, விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங் எகிறியது. தற்போது மீண்டும் இந்த இரண்டு சீரியல்களையும் இணைத்து டிஆர்பியை அதிகரிக்க விஜய் டிவி பக்கா பிளான் போட்டிருக்கிறது.

Bharathi kannamma and raja rani 2 serial mega sangamam promo video getting viral on social media

விஜய் டிவியில் நாளை முதல் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 ஆகிய சீரியல்கள் மஹா சங்கமம் என்கிற பெயரில் இணைந்து ஒளிபரப்பாக இருக்கிறது. இதன் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில் சிவகாமி சாமியாரிடம் சென்று மன்னிப்பு கேட்கிறார், ‘என்னிடம் கேட்காதே கடவுளிடம் கேள்’ என கூறுகிறார். அதன் பின் இரண்டு பெண்களை வர வைத்து மேடையில் இருக்கும் அம்மன் சிலைக்கு தங்க ஆபரணங்களை அணிவிக்க வைக்கிறார்.

Bharathi kannamma and raja rani 2 serial mega sangamam promo video getting viral on social media

அதன் பின் திரையை திறந்துபார்க்கும்போது நகைகள் அங்கு இல்லை. அதை கண்டுபிடிக்கிறேன் என சொல்லி ஒரு விஷயம் செய்கிறார் சாமியார். அப்போது சிவகாமி அம்மனுக்கு தீபாராதனை காட்டும் போது சிலையின் கண்களில் இருந்து ரத்தம் வருகிறது. அதை பார்த்து சிவகாமி தான் திருடி இருக்கிறார் என சாமியார் கூறுகிறார். அதை பார்த்து சிவகாமி எல்லாரும் அதிர்ச்சி ஆகின்றனர். இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்கள் விஜய் டிவி மற்றும் இந்த சீரியலை கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

Share this post