இது டெரரான லவ்'ஆ இருக்கும் போலயே.. டெரர் + ரொமான்ஸ் உடன் வெளியான ‘லவ்’ பட டீசர்!
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான ’பாய்ஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி தற்போது முக்கிய நடிகராக வலம் வருபவர் பரத். தற்போது இவரது 50வது படமான ’லவ்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் பரத் ஜோடியாக வாணிபோஜன் நடித்துள்ளார்.
பரத் - வாணி போஜன் கூட்டணியில் கடந்த மாதம் வெளியான மிரள் படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அந்த கூட்டணி மீண்டும் ஜோடியாக நடித்துள்ள இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆர்.பி.பாலா இயக்கியிருக்கும் இப்படத்தில் விவேக் பிரசன்னா, ராதா ரவி, பிக்பாஸ் டேனியல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ரோனி ரஃபேல் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இப்படத்தின் லவ் என ரொமாண்டிக் தலைப்பு இருந்தாலும் படம் செம்ம டெரராக இருக்கும் என்பது டீசர் மூலம் தெரிகிறது. த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் எதிர்பாராமல் நடந்த ஒரு மரணத்தை அடுத்து அந்த உடலை எப்படி அகற்றுவது என்பது குறித்த சிக்கலில் ஹீரோ இருப்பதாக தெரிகிறது. நொடிக்கு நொடி விறுவிறுப்பான த்ரில்லர் படமாக இந்த படம் அமைந்துள்ளதால் இந்த படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.