'பீஸ்ட்' புத்தம் புதிய சூப்பர்ஹிட் திரைப்படமா.. சன் டிவி ப்ரோமோவை வெச்சு செய்யும் ரசிகர்கள் !
கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் வெற்றியைத் தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் தயாரிப்பில், விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் ஷைன் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட்.
முதல் 2 திரைப்படங்களை போலவே, பீஸ்ட் படத்திலும் டார்க் காமெடி மற்றும் ஆக்ஷனை கொடுத்து ரசிகர்களை குதூகலப்படுத்தி இருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருந்த பீஸ்ட் திரைப்படம், கலவையான விமர்சனங்களையும், பல மீம்ஸ் ட்ரோல்களையும் பெற்றது. இதனால், நெல்சனை நெட்டிசன்கள் வெச்சு செய்து வந்தனர்.
இப்படத்தை விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடினாலும், எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என பலரும் கருத்தை கூறி வந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை சிறு அளவு கூட பூர்த்தி செய்யாமல் படுதோல்வியடைந்தது. இந்நிலையில், இப்படத்தை வருகிற தீபாவளி அன்று சன் டிவியில் ஒளிபரப்பு செய்யவுள்ளனர்.
அதற்கான ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது. இதில் பீஸ்ட் புத்தம் புதிய சூப்பர்ஹிட் திரைப்படம் என்று வாய்ஸ் ஓவர் வருவதை கவனித்த ரசிகர்கள். இது உங்களுக்கு சூப்பர்ஹிட் திரைப்படமா என்று கலாய்த்து வருகிறார்கள்.
🤣🤣🤣 pic.twitter.com/YZ4ioJbGdU
— மதுர பாய் 👶 (@maduraiboy0007) October 17, 2022