இன்னும் எத்தன நாள் கலாய்ப்பாங்க தெரிலயே.. வைரலாகும் பீஸ்ட் வீடியோ.. புலம்பும் விஜய் ரசிகர்கள்..

Beast climax video is trolled again on internet video getting viral

மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு, விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட். சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Beast climax video is trolled again on internet video getting viral

விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், செல்வராகவன், அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது.

இருப்பினும், மக்கள் இப்படத்தை கொண்டாடினர். பல லாஜிக் இல்லாத சீன்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்கள் சிலர் கலாய்த்து வந்தனர்.

இப்படம் 1 மாதம் கூட முழுமையாக திரையரங்குகளில் ஓடாத நிலையில், OTT தளத்தில் ரிலீஸ் ஆனது. இதனால், மீண்டும் சில சீன் வீடியோக்களை பதிவிட்டு கலாய்த்து வருகினறனர். அந்த வகையில், கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் விமானத்தை இயக்கும் வீடியோ பதிவிட்டுள்ளது தற்போது வைரல் ஆகி வருகிறது.

Share this post