"டாஸ்மாக்கை மூடுங்க.. என்னை அரசியலுக்கு இழுக்காதீங்க.. உங்களால் சமாளிக்க முடியாது.." முதல்வருக்கு சவால் விட்ட பாலாஜி முருகதாஸ்
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது. இந்நிலையில், ‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியை கமல் 3 வாரமும், மீதம் சிம்பு அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் மூலம் திரையுலகில் பிரபலமாக நினைக்கும் பலரும் இதன் மூலம் பிரபலம் அடைந்துள்ளனர். அந்த வகையில், பிக் பாஸ் 4 வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். இவர் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார். இவர் கடந்த ஆண்டு ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பான பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் பாலாஜி பேசிய சில விஷயத்தில் பெரும் சர்ச்சையே வெடித்தது. இப்படி ஒரு நிலையில், இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ஆன்லைன் ரம்மியை விட குடிப்பழக்கம் நிறைய குடும்பங்களை அழிக்கிறது முதலில் டாஸ்மாக்கை மூடுங்கள்’ என்று முதல்வரை டேக் செய்து பதிவிட்டுள்ளார். ‘குடியால் ஆதரவற்று இருப்பவர்கள் என்னைப்போல தமிழ்நாட்டில் மிக அதிகம்.
என்னை அரசியலுக்குள் இருக்காதீர்கள். உங்களால் தாங்கிக் கொள்ள முடியாது’ என்று பதிவிட்டுள்ளார். பாலாஜியின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலர் பாலாஜி, பீரில் குளித்த வீடியோக்களையும் அவர் பப்பில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ட்ரோல் செய்து வருகின்றனர்.
Is it da clown நாயே?? pic.twitter.com/ZkZZHBbNpS
— Common Manᶜᵐ (@TheCommonMannn) March 26, 2023
டேய் தற்குறி இதெல்லாம் யாரு உன் ஜெராக்ஸ் ஏண்டா மெண்டல் நீ பெரிய ஆள் ஆகணும்கிறதுக்காண்டி ஏதாவது பேசாதடா நீ யோக்கியமா இருந்துட்டு பேசணும் pic.twitter.com/ET0trowXij
— FAREETH (@SheikFa94969798) March 26, 2023