தோ வந்துடும்.. தோ வந்துடும்னு சொன்னாங்க.. விரக்தியில் பாலாஜி முருகதாஸ் எடுத்த முடிவு..!

balaji-murugadoss-complaint-on-fire-producer

பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். அந்த சீசனில் மக்களிடம் ஆதரவை பெற்ற அவர் டைட்டில் ரன்னராகவும் மாறினார். இதற்கிடையே தற்போது பாலாஜி முருகதாஸ் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார்.

balaji-murugadoss-complaint-on-fire-producer

இந்நிலையில், பாலாஜி முருகதாஸ் தற்போது fire என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இந்த திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ அண்மையில் வெளியானது. இதில், படுக்கையறை காட்சி ஜிம் ஒர்க் அவுட் காட்சி கிளாமர் காட்சி என அனைத்திலும் பாலாஜி முருகதாஸ் அருமையாக நடித்திருந்தார். திரில்லர் கதைய அம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் அடுத்த கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

balaji-murugadoss-complaint-on-fire-producer

இந்நிலையில், பாலாஜி முருகதாஸ் அவரது எக்ஸ் தளத்தில் இதில், நடித்ததற்காக ஜே எஸ் கே ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் ஒரு ரூபாய் கூட சம்பளம் தரவில்லை என தற்போது அவர் புகார் தெரிவித்துள்ளார். மேலும், என்னால் முடியவில்லை நான் சினிமாவை விட்டே போகிறேன் என பாலாஜி முருகதாஸ் தற்போது பதிவிட்டுள்ளார்.

Share this post