கார் விபத்தில் சிக்கிய பாக்கியலக்ஷ்மி சீரியல் பிரபலங்கள் ! வெளியான ஷாக்கிங் புகைப்படங்கள்

Bakiyalakshmi fame divya meena and mila met with car accident in trichy

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி இல்லத்தரசிகளின் வரவேற்பை பெற்று வரும் தொடர் பாக்கியலட்சுமி. குடும்ப தலைவிகள் வீட்டில் சந்திக்கும் பிரச்சனைகள், எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்கள் குறித்து எதார்த்தமாக வெளிப்படுத்தும் கதைதான் இந்த தொடர்.

Bakiyalakshmi fame divya meena and mila met with car accident in trichy

இதில் பாக்கியா கதாபாத்திரத்தில் நடிக்கும் சுசித்ரா இந்த ரோலுக்கு பொருத்தமாக நடித்து வருகிறார். மேலும், பல சின்னத்திரை பிரபலங்கள் இணைந்து நடித்து வரும் இந்த தொடரில் அனைத்து கதாபாத்திரமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Bakiyalakshmi fame divya meena and mila met with car accident in trichy

இந்நிலையில், ஜென்னியாக நடிக்கும் திவ்யா, செல்வி ஆக நடிக்கும் மீனா மற்றும் ஷகிலா அவர்களின் தத்து மகள் மிலா உள்ளிட்டோர் ஒரு கார் விபத்தில் சிக்கியுள்ளனர். இவர்கள் 3 பேரும் நல்ல நண்பர்களாக பழகி வருகிறார்கள். எப்போதும் 3 பேரும் வெளியே செல்வதும் புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்ட வண்ணம் இருப்பார்கள்.

Bakiyalakshmi fame divya meena and mila met with car accident in trichy

அண்மையில் இவர்கள் குமிழியில் ஒரு படப்பிடிப்பிற்காக காரில் சென்றுள்ளனர், அப்போது எதிர்ப்பாராத விதமாக திருச்சி பக்கத்தில் அவர்களது காருக்கு பின்னால் வந்த கார் கட்டுப்பாடு இழந்து மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது.

Bakiyalakshmi fame divya meena and mila met with car accident in trichy

இதில் மிலாவிற்கு மட்டும் முதுகில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது, மற்ற இருவருக்கும் ஒன்றும் ஆகவில்லையாம்.

Share this post