'பொண்ணுக இப்டி சம்பாதிக்குறது தப்பே இல்ல..' சர்ச்சை வசனங்களுடன் வெளியான பகாசூரன் ட்ரைலர்!

bakasuran trailer video released and getting viral on social media

இயக்குனர்கள் பலர் எடுத்துக்காட்டாக கவுதம் மேனன், ரவிக்குமார், சமுத்திரக்கனி, சசிகுமார் என பலரும் நடிகர்களாகவும் திகழ்ந்து வருகின்றனர். அந்த வகையில், செல்வராகவன் தற்போது தனது நடிப்பு பயணத்தை தொடங்கியுள்ளார்.

bakasuran trailer video released and getting viral on social media

துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான செல்வராகவன், அதனைத் தொடர்ந்து, காதல் கொண்டேன், 7G ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, NGK, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் போன்ற வித்தியாசமான திரைக்கதைகளை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர்.

bakasuran trailer video released and getting viral on social media

பீஸ்ட், சாணி காயிதம், நானே வருவேன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. பிரபல இயக்குனராக வலம் வரும் இயக்குனர் மோகன் ஜி அவர்களின் இயக்கத்தில் தற்போது செல்வராகவன், பகாசூரன் படத்தில் நடித்து வருகிறார்.

bakasuran trailer video released and getting viral on social media

இயக்குனர் மோகன் ஜி, பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமாவில் உலகில் அடி எடுத்து வைத்தவர். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு, மோகன் இயக்கத்தில் வெளிவந்த படம் திரௌபதி, ருத்ரதாண்டவம். இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி இருந்தாலும் பேசுபொருளாக மாறி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

bakasuran trailer video released and getting viral on social media

ஜி எம் ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகரான நட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

bakasuran trailer video released and getting viral on social media

இப்படத்தின் டீசர் வெளியாகி ஆவலை அதிகரித்துள்ளது. டீசரின்படி, சமீப காலமாக இளம் பெண்கள் சிக்கித் தவிக்கும் இணையதள க்ரைம் குறித்த கதைக்களமாக இருக்கும் என தெரிகிறது. பணத்திற்காக சீரழிக்கப்படும் பெண்கள், கல்லூரி மாணவிகள் பற்றியும், பிரச்சனை என வரும் போது, தற்கொலை முடிவை கையில் எடுப்பது குறித்து இதுவரை யாரும் சொல்லாத ஒரு கோணத்தில் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post