'வீட்டுல புள்ளைங்க கதவ பூட்டிட்டு என்ன பண்றாங்கன்னு parents கவனிச்சா தான்'.. வைரலாகும் பகாசூரன் டீசர் !

bakasuran teaser video getting viral on social media

இயக்குனர்கள் பலர் எடுத்துக்காட்டாக கவுதம் மேனன், ரவிக்குமார், சமுத்திரக்கனி, சசிகுமார் என பலரும் நடிகர்களாகவும் திகழ்ந்து வருகின்றனர். அந்த வகையில், செல்வராகவன் தற்போது தனது நடிப்பு பயணத்தை தொடங்கியுள்ளார்.

bakasuran teaser video getting viral on social media

துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான செல்வராகவன், அதனைத் தொடர்ந்து, காதல் கொண்டேன், 7G ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, NGK, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் போன்ற வித்தியாசமான திரைக்கதைகளை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர்.

bakasuran teaser video getting viral on social media

பீஸ்ட், சாணி காயிதம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தற்போது தனுஷ் உடன் நானே வருவேன் படத்தில் நடித்தும் இயக்கியும் வருகிறார். ஜித்தன் ரமேஷ் நடிக்கும் ஒரு படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார்.

bakasuran teaser video getting viral on social media

பிரபல இயக்குனராக வலம் வரும் இயக்குனர் மோகன் ஜி அவர்களின் இயக்கத்தில் தற்போது செல்வராகவன், பகாசூரன் படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் மோகன் ஜி, பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமாவில் உலகில் அடி எடுத்து வைத்தவர்.

bakasuran teaser video getting viral on social media

பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு, மோகன் இயக்கத்தில் வெளிவந்த படம் திரௌபதி, ருத்ரதாண்டவம். இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி இருந்தாலும் பேசுபொருளாக மாறி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

bakasuran teaser video getting viral on social media

ஜி எம் ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகரான நட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது, வெளியாகியுள்ள டீசர் ஆவலை அதிகரித்துள்ளது. டீசரின்படி, ‘சமீப காலமாக இளம் பெண்கள் சிக்கித் தவிக்கும் இணையதள க்ரைம் குறித்த கதைக்களமாக இருக்கும் என தெரிகிறது.

Share this post