அரபிக் குத்து போட்ட பி.வி.சிந்து.. செம ட்ரெண்டிங் எடுக்கும் ரீல்ஸ் வீடியோ

Badmiton player pv sindhu dances for arabic kuthu song viral reels video

கோலமாவு கோகிலா, டாக்டர் திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணா டாஸ், விடிவி கணேஷ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத்.

இப்படம் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. திரைப்படம் வெளியாவதற்கு முன்பே, இப்படத்தில் இருந்து அரபிக் குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும், இப்பாடலை திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் ரீல்ஸ் செய்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வந்தனர். அந்த வகையில் தற்போது, அரபிக் குத்து பாடலுக்கு பிரபல பேட்மிட்டன் வீராங்கனை பி.வி. சிந்து நடனம் ஆடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Share this post