'ஆமா.. எனக்கு பொம்பள சொகம் கேக்குது' Negative கமெண்டுகளுக்கு Live பேட்டியில் பதிலடி கொடுத்த பப்லு !

babloo prithveeraj openly answers for comments on his second marriage video getting viral

தமிழில் 1971ம் ஆண்டு வெளியான நான்கு சுவர்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் பப்லு என்கிற பிரித்விராஜ். இந்த படத்தை தொடர்ந்து, நீதி, டாக்டர் சிவா, நாளை நமதே, பாரதவிலாஸ் போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். நான் சிவப்பு மனிதன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமான இவர், அவள் வருவாளா, பயணம் போன்ற பல படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

babloo prithveeraj openly answers for comments on his second marriage video getting viral

தமிழ் மொழியை தவிர தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். திரைப்படங்கள் மட்டுமின்றி கோகுலத்தில் சீதை, அரசி, வாணி ராணி, மர்ம தேசம் போன்ற பல சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர். தற்போது சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘கண்ணான கண்ணே’ சீரியலில் நடித்து வருகிறார்.

babloo prithveeraj openly answers for comments on his second marriage video getting viral

சிறந்த நடிகர் என்பதை தாண்டி, ஒரு டான்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பப்லு 23 வயது பெண் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளதாக, வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் 1994ம் ஆண்டு, பீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு 25 வயதில் மகன் ஒருவரும் உள்ளார். இவர் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர்.

babloo prithveeraj openly answers for comments on his second marriage video getting viral

தன்னுடைய மகனை மிகவும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இவர்கள் இன்னொரு குழந்தையை கூட பெற்றுக்கொள்ளவில்லை. எனினும் மகன் ஆட்டிசமால் பாதிக்கப்பட்டதால், சில வருடங்கள் மிகுந்த மனஉளைச்சலில் இருந்த பப்லு, திரையுலகில் இருந்தும் விலகி இருந்தார்.

babloo prithveeraj openly answers for comments on his second marriage video getting viral

தற்போது மீண்டும் சீரியல்களில் நடித்து வரும் பப்லு, கடந்த சில வருடங்களாக, மனைவி பீனாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த நிலையில், மலேசியாவில் பப்லுவிக்கு தொழில் ரீதியாக சில உதவிகள் செய்த, பெண்ணுக்கும் இவருக்கும் இடையே மலர்ந்த காதல் தற்போது திருமணத்தில் முடித்துள்ளதாக தகவல் வெளியானது.

babloo prithveeraj openly answers for comments on his second marriage video getting viral

மனதில் பட்ட விஷயங்களை, வெளிப்படையாக பேசும் பப்லு இது குறித்து மௌனம் சாதித்து வந்தார். இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பப்லு தான் 2ம் திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணிற்கு 23 வயது இல்லை அவருக்கு 24 வயது ஆகிறது என்று கூறி இருக்கிறார். மேலும், அவர் மலேசியாவை சேர்ந்த பெண் இல்லை அவர் ஆந்திரா தெலுங்கானாவை சேர்ந்த தெலுங்கு பெண் என்றும் கூறியுள்ளார். மேலும், எங்களுடைய விஷயம் அவரது குடும்பத்திற்கு தெரியும், அவர்களும் அதற்கு சம்மதித்து விட்டார்கள்.

babloo prithveeraj openly answers for comments on his second marriage video getting viral

ஒரு வருடமாக தான் எங்கள் இருவருக்கும் பழக்கம். எனக்கு 56 வயதாகிறது அவருக்கு 24 வயது தான். எனவே, அவர் யோசிக்க நேரம் வேண்டும் என்பதால் இன்னும் நாங்கள் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், அவரும் எங்கள் திருமணத்தில் உறுதியாக இருக்கிறார் என்று கூறி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் தன் வருங்கால இரண்டாம் மனைவியுடன் முதன் முறையாக பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் கமெண்டில் வந்த சில விமர்சனங்களுக்கு பதில் கொடுத்தார். அதில் ஒரு கமெண்டில் இந்த வயசுல பொம்பள சுகம் கேக்குதா என்ற கமென்டிற்கு ‘ஆம் கேக்குது’ என்று பதில் அளித்துள்ளார்.

babloo prithveeraj openly answers for comments on his second marriage video getting viral

மேலும், தன் முதல் மனைவி குறித்து பேசிய பப்லு ‘எனக்கு இவங்க நிறைய மரியாதை நிறைய காதல் மற்றும் சுகத்தை எனக்கு கொடுக்கிறாள் இதையெல்லாம் என் முதல் மனைவி கொடுக்கவில்லை அவங்க என்னை சரியாக கையாண்டிருந்தால் நான் வெளியில் சாப்பிட்டு இருக்க மாட்டேன் அவங்க நிச்சயம் இதை நல்லபடியாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை’ என்று கூறியுள்ளார். மேலும் பல வெளிப்படையான விஷயங்களையும் அவர் பேசியிருந்தார்.

Share this post