Viral Video: 'பாபா' ரீ-ரிலீஸ்.. கிளைமாக்ஸ் சீன் மாற்றம்.. சூப்பர் தலைவா.. சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள்
2002ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் பாபா. கதை, திரைக்கதை எழுதியதுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் 4வது முறையாக இந்த படத்தை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார்.
மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ், ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார். பிருந்தா, பிரபுதேவா மற்றும் லாரன்ஸ் ஆகியோர் நடன இயக்குனர்களாக பணிபுரிந்தனர்.
மகா அவதார் பாபாஜியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம், வெளியான சமயத்தில், பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்தப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி அடிக்கடி காட்டும் அந்த பாபா முத்திரை, படம் வெளியான சமயத்தில் குழந்தைகளையும் வசீகரித்து, இப்போதுவரை அவருக்கான ஒரு தனி அடையாளமாகவே கருதப்படுகிறது.
20 ஆண்டுகளுக்கு பின் தற்போது பாபா படத்தை புதிய பொலிவுடன் ரீ ரிலீஸ் செய்துள்ளனர். இதில் சில காட்சிகள் மாற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. அதன்படி, படத்தில் இடம்பெறும் 7 மந்திரங்களுக்கு பதிலாக 5 மந்திரங்கள் மட்டுமே இடம்பெறுகிறது. அதே போல் பாபா படத்தின் கிளைமாக்ஸ் காட்சியையும் மாற்றியுள்ளார்கள்.
2002ஆம் ஆண்டு வெளிவந்த பாபா படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் மக்களிடம் செல்வதா அல்லது பாபாவிடம் செல்வதா என்று ரஜினிகாந்த் முடிவெடுத்து மக்களிடம் செல்வது போல் சற்று அரசியல் கலந்த காட்சி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இன்று ரீ ரிலீஸ் ஆகியுள்ள பாபா படத்தில் அதை மொத்தமாக தூக்கிவிட்டு, மீண்டும் உன்னுடைய தாய் வயிற்றில் மறுஜென்மத்தில் பிறந்து உன் தாய்யின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்று, அதன்பின் நானே உன்னை அழைத்து கொள்கிறேன் என்று ரஜினியிடம், பாபா கூறுகிறார்.
Baba alternative climax 😍😍😍
— S A B A R I 🤘 (@sabarirajan94) December 10, 2022
Thalaivar created this superbly so convincing to everyone. 🔥🙏#BaBaReRelease #BabaReturns @rajinikanth pic.twitter.com/NBKLT1C0S2