வெடித்த பாக்யா - ராதிகா பிரச்சனை.. கைதான கோபி.. வெளியாகி வைரலாகும் வீடியோ !
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும், சீரியல் தொடர்களும் ரசிகர்களின் பேவரைட்டாக மாறி வரவேற்பு கிடைப்பது வழக்கம். அந்த வகையில், பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி தொடர் செம ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகிறது.
பாக்கியலட்சுமி தொடர், ஒரு குடும்ப தலைவியின் கதையை எடுத்துரைக்கும் இந்த தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. டாப் TRPயை பிடித்து வரும் ஒரு சில தொடர்களில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று. சில மாதங்களுக்கு முன் பாரதி கண்ணம்மா முதலில் இருந்த நிலையில், இப்போது பாக்கியலட்சுமி தான் டாப். இந்த வார ரேட்டிங்கில் கூட டாப் 5ல் வந்துள்ளது.
இந்த கதை ஒரு குடும்ப தலைவியின் இன்னல்கள் தாம் சந்திக்கும் சில பிரச்சனைகள் குறித்து எதார்த்தமாக சொல்லப்படும் கதை. இதில் நடிக்கும் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இத்தொடரில் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக கதை சென்று கொண்டிருக்கிறது.
ராதிகாவுடன் தொடர்பில் கோபி இருப்பது குறித்து கோபியின் மொத்த குடும்பமும் அறிய வருகிறது. பாக்யா, கோபி ஆசைப்பட்டதை போல விவாகரத்து கொடுக்க முடிவெடுத்து விடுகிறார். கோபியும் கோர்ட்டுக்கு கிளம்பி போன நிலையில் இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிடுவது போன்ற ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், பாக்கியலட்சுமி தொடர் குழுவினர் இந்த வாரம் ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில், ராமர் லட்சுமி ராமகிருஷ்ணன் வேடத்தில் வர அவரிடம் ராதிகா மற்றும் பாக்யா என இருவரும் பஞ்சாயத்து செய்கின்றனர். மேலும் கோபியை போலீஸ் கைது செய்து விட்டதாக முகமூடி அணிந்த ஒருவரை போலீசார் கைது செய்தது போன்ற ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இதனைப் பார்த்த ரசிகர்கள் நிஜத்தில் சீரியலில் இப்படி நடந்தால் சூப்பராக இருக்கும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.