பாக்கியலட்சுமி சீரியலை விட்டு போக முடிவெடுத்த கோபி 'சதீஷ்'..ஆனா.. அவரே வெளியிட்ட வீடியோ !
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும், சீரியல் தொடர்களும் ரசிகர்களின் பேவரைட்டாக மாறி வரவேற்பு கிடைப்பது வழக்கம். அந்த வகையில், பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி தொடர் செம ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகிறது.
பாக்கியலட்சுமி தொடர், ஒரு குடும்ப தலைவியின் கதையை எடுத்துரைக்கும் இந்த தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. டாப் TRPயை பிடித்து வரும் ஒரு சில தொடர்களில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று. சில மாதங்களுக்கு முன் பாரதி கண்ணம்மா முதலில் இருந்த நிலையில், இப்போது பாக்கியலட்சுமி தான் டாப். இந்த வார ரேட்டிங்கில் கூட டாப் 5ல் வந்துள்ளது.
இந்த கதை ஒரு குடும்ப தலைவியின் இன்னல்கள் தாம் சந்திக்கும் சில பிரச்சனைகள் குறித்து எதார்த்தமாக சொல்லப்படும் கதை. இதில் நடிக்கும் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இத்தொடரில் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக கதை சென்று கொண்டிருக்கிறது.
கோபியை விவாகரத்து செய்ய பாக்யா ஒப்புக்கொண்ட நிலையில் அவர்களுக்கு நீதிமன்றம் விவாகரத்து கொடுத்துவிடுகிறது. அதற்கு பிறகு வீட்டுக்கு வரும் பாக்யாவை கோபி தகாத வகையில் பேசுவது போன்றவை கடந்த சில எபிசோடில் காட்டப்பட்டு வருகிறது. இதனால் வீட்டில் ஒரு போர்க்களம் நடக்கிறது. அந்த சீரியல் பார்ப்பவர்கள் நிச்சயம் கோபியை தினமும் திட்டிக்கொண்டு தான் இருப்பார்கள். இதனை தாண்டி சமூக வலைத்தளங்களில் கமெண்ட் பதிவிட்டு திட்டியும் வருகின்றனர்.
நான் நடிகன், அது நடிப்பு மட்டும்தான் என சதீஷ் பல முறை விளக்கம் கொடுத்தாலும், நிஜத்திலும் அவரை பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
இந்த தொடரை பார்க்கும் ரசிகர்கள் மொத்த பேரும் கோபியை அதாவது, அந்த ரோலில் நடித்து வரும் நடிகர் சதிஷை திட்டி வருகின்றனர். தற்போது தன்னை திட்டுபவர்கள் பற்றி பேசி இருக்கிறார். இது வெறும் நடிப்பு தான் என சொல்லி அவர் மன்னிப்பும் கேட்டிருக்கிறார்.
கோபி வெளியிட்டு இருக்கும் வீடியோவில் கூறி இருப்பதாவது: “பாக்கியலட்சுமி சீரியலில் என்ன நடக்கிறது என பார்த்துக்கொண்டு தான் இருக்கிறீர்கள், அடுத்த 5 நாள் ரொம்ப மோசமாக இருக்க போகிறது. தெரிந்தோ தெரியாமலோ கோபி கேரக்டர் மூலமாக உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் தயவு செய்துமன்னித்துவிடுங்கள். இது வெறும் நடிப்பு தான்.
எனக்கு தெரியும். சில பேர் என்னை வருத்தப்படவேண்டாம் என சொல்கிறீர்கள். திட்டுறவங்க திட்டட்டும்.. அது மெடல் மாதிரி என்றும் சிலர் சொல்கின்றனர். இப்படி நடிக்கும்போது எனக்கே மனசு கஷ்டமாக இருக்கும். சீரியலை விட்டு போய்விடலாம் என்றும் தோன்றும். பாசிட்டிவ், சாஃப்ட் ஆன கேரக்டர் நடிக்கலாம் என்று நினைப்பேன், ஆனால் எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் இல்லையா. அதனால் தான் தொடர்ந்து நடிக்கிறேன்.” என கூறியுள்ளார்.
மன்னிச்சிடுங்க.. இது வெறும் நடிப்பு தான்! #Gopi #Baakiyalakshmi pic.twitter.com/YQxlqpRR8J
— Parthiban A (@ParthibanAPN) August 12, 2022