'பிடிக்காத பாக்யாவுடன் 3 குழந்தை எப்படி?'.. '23 வயசுல அதற்கான தேவைகள்..' ரசிகர் கேள்விக்கு ’கோபி’ நெத்தியடி !

Baakiyalakshmi serial fame actor sathish kumar reacts to fans doubts and questions

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும், சீரியல் தொடர்களும் ரசிகர்களின் பேவரைட்டாக மாறி வரவேற்பு கிடைப்பது வழக்கம். அந்த வகையில், பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி தொடர் செம ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகிறது.

Baakiyalakshmi serial fame actor sathish kumar reacts to fans doubts and questions

பாக்கியலட்சுமி தொடர், ஒரு குடும்ப தலைவியின் கதையை எடுத்துரைக்கும் இந்த தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. டாப் TRPயை பிடித்து வரும் ஒரு சில தொடர்களில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று. சில மாதங்களுக்கு முன் பாரதி கண்ணம்மா முதலில் இருந்த நிலையில், இப்போது பாக்கியலட்சுமி தான் டாப். இந்த வார ரேட்டிங்கில் கூட டாப் 5ல் வந்துள்ளது.

Baakiyalakshmi serial fame actor sathish kumar reacts to fans doubts and questions

இந்த கதை ஒரு குடும்ப தலைவியின் இன்னல்கள் தாம் சந்திக்கும் சில பிரச்சனைகள் குறித்து எதார்த்தமாக சொல்லப்படும் கதை. இதில் நடிக்கும் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இத்தொடரில் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக கதை சென்று கொண்டிருக்கிறது.

Baakiyalakshmi serial fame actor sathish kumar reacts to fans doubts and questions

ராதிகாவுடன் தொடர்பில் கோபி இருப்பது குறித்து கோபியின் மொத்த குடும்பமும் அறிய வருகிறது. மேலும், தற்போது கோபிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் இருக்கும் நிலையில், பாக்கியலக்ஷ்மியும் உண்மையை அறிந்து கொள்கிறார். இந்த ப்ரோமோ வீடியோ தற்போது செம வைரல் ஆகி வருகிறது. இனி என நடக்கும் என பார்க்க ரசிகர்கள் தற்போது ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

Baakiyalakshmi serial fame actor sathish kumar reacts to fans doubts and questions

இந்நிலையில் தற்போது இந்த சீரியல் ரசிகர்களுக்கு இருக்கும் கேள்வி பற்றி கோபியாக நடிக்கும் சதீஷ் விளக்கம் கொடுத்து இருக்கிறார். பிடிக்காத பாக்யாவுடன் எப்படி 3 குழந்தை பெத்தீங்க.. என ரசிகர்கள் பலரும் கேட்டதற்கு பதில் சொன்ன பாக்கியலட்சுமி சீரியல் ’கோபி’ “திருமணம் ஆகும் போது கோபிக்கு 24 வயது, பாக்யாவுக்கு என்ன வயது.. ரைட்டர் சொல்லவில்லை.. நான் எதாவது வயது சொல்லி சர்ச்சையில் சிக்க விரும்பவில்லை. கோபிக்கு அந்த வயதில் உடல் தேவைகள் இருந்திருக்கும், அதனால் மூன்று குழந்தைகள் பாக்யாவுடன் பெற்று இருக்கலாம் என நினைக்கிறேன்” என நடிகர் சதிஷ் தெரிவித்து இருக்கிறார்.

Baakiyalakshmi serial fame actor sathish kumar reacts to fans doubts and questions

மேலும் இது சீரியல், நான் நடிகர், கொடுத்த கதாபாத்திரத்தில் நடிக்கிறேன், அதனால் என்னை திட்டாதீர்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share this post