'5 வயதில் தம்பி, பெற்றோரை இழந்தேன்.. அனாதையாக..' பாக்கியலட்சுமி 'கோபி' உண்மை வாழ்க்கை பற்றி அவரே பதிவிட்ட வீடியோ !

Baakiyalakshmi sathish kumar shares about his own personal life in video

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும், சீரியல் தொடர்களும் ரசிகர்களின் பேவரைட்டாக மாறி வரவேற்பு கிடைப்பது வழக்கம். அந்த வகையில், பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி தொடர் செம ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகிறது.

Baakiyalakshmi sathish kumar shares about his own personal life in video

பாக்கியலட்சுமி தொடர், ஒரு குடும்ப தலைவியின் கதையை எடுத்துரைக்கும் இந்த தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. டாப் TRPயை பிடித்து வரும் ஒரு சில தொடர்களில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று. சில மாதங்களுக்கு முன் பாரதி கண்ணம்மா முதலில் இருந்த நிலையில், இப்போது பாக்கியலட்சுமி தான் டாப். இந்த வார ரேட்டிங்கில் கூட டாப் 5ல் வந்துள்ளது.

Baakiyalakshmi sathish kumar shares about his own personal life in video

இந்த கதை ஒரு குடும்ப தலைவியின் இன்னல்கள் தாம் சந்திக்கும் சில பிரச்சனைகள் குறித்து எதார்த்தமாக சொல்லப்படும் கதை. இதில் நடிக்கும் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இத்தொடரில் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக கதை சென்று கொண்டிருக்கிறது.

Baakiyalakshmi sathish kumar shares about his own personal life in video

ராதிகாவுடன் தொடர்பில் கோபி இருப்பது குறித்து கோபியின் மொத்த குடும்பமும் அறிய வருகிறது. பாக்யா வீட்டை விட்டு கிளம்பி விடுகிறார். இதனால் வீட்டில் ஒரு போர்க்களம் நடக்கிறது. அந்த சீரியல் பார்ப்பவர்கள் நிச்சயம் கோபியை தினமும் திட்டிக்கொண்டு தான் இருப்பார்கள். இதனை தாண்டி சமூக வலைத்தளங்களில் கமெண்ட் பதிவிட்டு திட்டியும் வருகின்றனர்.

Baakiyalakshmi sathish kumar shares about his own personal life in video

நான் நடிகன், அது நடிப்பு மட்டும்தான் என சதீஷ் பல முறை விளக்கம் கொடுத்தாலும், நிஜத்திலும் அவரை பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சதீஷ் தனது சொந்த வாழ்க்கையில் சந்தித்த துயரம் பற்றி பேசி இருக்கிறார்.

Baakiyalakshmi sathish kumar shares about his own personal life in video

“5 வயதில் தம்பியை இழந்து, விபத்தில் பெற்றோரை இழந்து.. ஒரு அனாதையாக சென்னைக்கு வந்தேன். இரண்டு சட்டை, இரண்டு அரை trouser மட்டும் தான் வைத்திருந்தேன். என் அத்தை வீட்டில் தான் வாழ்ந்தேன், வளர்த்தேன். எனக்கு தமிழ் பேச சொல்லி கொடுத்து, வாழ்க்கை கொடுத்து, இப்போது வருமானம் கொடுத்து, பெயர் புகழ் கொடுத்து, இன்றும் என்னை வாழ வைப்பது தமிழன்னை தான். தமிழ் ஒரு மொழி மட்டுமில்லை.. அது கலாச்சாரம், அது ஒரு மதம், அது ஒரு சக்தி. வாழ்க தமிழ்” என சதீஷ் பேசி இருக்கிறார்.

Share this post