"வயசானா லவ் பண்ண கூடாதா.. அப்படி சட்டம் இருக்கா" பாக்கியலட்சுமி 'கோபி' கேள்வி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும், சீரியல் தொடர்களும் ரசிகர்களின் பேவரைட்டாக மாறி வரவேற்பு கிடைப்பது வழக்கம். அந்த வகையில், பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி தொடர் செம ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகிறது.
பாக்கியலட்சுமி தொடர், ஒரு குடும்ப தலைவியின் கதையை எடுத்துரைக்கும் இந்த தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. டாப் TRPயை பிடித்து வரும் ஒரு சில தொடர்களில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று. சில மாதங்களுக்கு முன் பாரதி கண்ணம்மா முதலில் இருந்த நிலையில், இப்போது பாக்கியலட்சுமி தான் டாப். இந்த வார ரேட்டிங்கில் கூட டாப் 5ல் வந்துள்ளது.
இந்த கதை ஒரு குடும்ப தலைவியின் இன்னல்கள் தாம் சந்திக்கும் சில பிரச்சனைகள் குறித்து எதார்த்தமாக சொல்லப்படும் கதை. இதில் நடிக்கும் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இத்தொடரில் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக கதை சென்று கொண்டிருக்கிறது.
ராதிகாவுடன் தொடர்பில் கோபி இருப்பது குறித்து கோபியின் மொத்த குடும்பமும் அறிய வருகிறது. மேலும், தற்போது கோபிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் இருக்கும் நிலையில், பாக்கியலக்ஷ்மியும் உண்மையை அறிந்து கொள்கிறார்.
ராதிகா உடன் தான் அவர் தொடர்பில் இருக்கிறார் என பாக்யா உண்மையை வீட்டில் போட்டு உடைக்க அவரும் கடும் ஷாக் ஆகிறார். அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.இந்நிலையில் கோபியாக நடித்து வரும் சதீஷ் ஏற்கனவே, கோபி கதாபாத்திரத்தை வைத்து தன்னை கண்டபடி திட்டுகிறார்கள் என வீடியோ பதிவிட்டிருந்தார். தற்போது செம விறுவிறுப்பாக சீரியல் தொடர் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இது பற்றி பேசிய சதீஸ்(கோபி) “இன்னும் ஒரு வாரத்திற்கு கூண்டில் குற்றவாளியாக கோபி நிற்கப்போகிறார். தண்டனைக்கு தயாராகி கொண்டிருக்கிறேன்.
பாவம் கோபி.. காதலுக்காக அவர் செய்த பித்தலாட்டங்கள் நிறைய.. அனுபவிச்சி தான் ஆகணும்.வயசானால் லவ் பண்ண கூடாது இல்லீங்களா.. அப்படி எல்லாம் சட்டம் இருக்கு.. என்ன பண்றது” என பேசி இருக்கிறார்.
#Gopi #Baakiyalakshmi pic.twitter.com/3DifonWuHy
— Parthiban A (@ParthibanAPN) July 9, 2022