"ஷிவின் வெளிய மாட்னா *** " கெட்ட வார்த்தை பேசிய அசீம்.. ஷாக்கான மைனா... வைரலாகும் வீடியோ.
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.
சிவின் கணேசன், நடிகர் அசீம், நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, ராப் பாடகர் ஏ.டி.கே, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே. கதிரவன், மைனா நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஜிபி முத்து மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியேறினார். மெட்டி ஒலி சாந்தி, கானா பாடகர் அசல், ஷெரினா, வி.ஜே.மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, மாடல் குயின்சி, ஜனனி, தனலட்சுமி எவிக்ட் ஆகி வெளியேறினர்.
இந்த சீசனில் தொடக்கத்திலிருந்தே சர்ச்சையான போட்டியாளராக வலம் வருபவர் அசீம். சக போட்டியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது, ஒருமையில் பேசுவது, கெட்ட வார்த்தை உபயோகிப்பது என பல விஷயங்களை செய்து வருகிறார். விக்ரமனுக்கும் அசீமுக்கும் எப்போதும் முட்டி கொள்வது வாடிக்கையாக நடந்து வருகிறது. சமீபத்தில் ஷிவினுக்கும் அசீமுக்கும் சண்டை வந்த வண்ணம் உள்ளது.
இப்படி வாராவாரம் மற்ற போட்டியாளர்களை தொடர்ந்து தரக்குறைவாக பேசி வரும் அசிமை வார இறுதியில் கமல் வறுத்தெடுப்பதும், அப்போது தலையாட்டி விட்டு பின்னர் மீண்டும் தன்னுடைய தலையாட்டி பாணியை அசீம் பின் தொடர்வதும் வாடிக்கையாகத்தான் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில், கடந்த வாரம் அசீம், விக்ரமன் மற்றும் சிவினிடம் நடந்து கொண்ட முறையை குறித்து கமல் கண்டித்து இருந்தார்.
ஆனாலும் தான் செய்தது தவறு இல்லை என்பது போலத்தான் அசீம் வாதாடி இருந்தார். மேலும், நான் வெளியில் இப்படி இருந்தது கிடையாது. ஏதாவது பிரச்சனை என்றால் கூட விலகிச் சென்று விடுவேன். இவ்வளவு வாதிட மாட்டேன் என்று அசீம் கூறி இருந்தார். ஆனால், அசீம் குறித்து அவருடன் நடித்த பல நடிகர்கள் அசீம் படப்பிடிப்பில் கூட எவ்வாறு சக நடிகர்களை தர குறைவாக பேசுவார்கள் என்று பல வீடியோக்களில் கூறியிருக்கிறார்கள்.
அந்த வீடியோக்களை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் மீண்டும் அசீம், ஷிவின் குறித்து பேசி இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் பேசி இருக்கும் அசீம் ‘ஷிவின் எல்லாம் வெளியில் என்கிட்ட மாட்னா, ஜூஸ் புழிஞ்சுடுவேன்’ என்று மோசமாக பேசி இருக்கிறார். அதை கேட்ட மைனா ‘நடுவுல எதோ சொன்னயே’ என்று அசீம் சொன்ன கெட்ட வார்த்தையை சுட்டிக்காட்டி இருக்கிறார்.
Look at this cheap third-rate fellow!
— தனி ஒருவன் (@itsThaniOruvan) December 26, 2022
How he acted in front of @ikamalhaasan sir
How he is behaving now.
He using the word "Ommala veliya va" una juice pulinjiruven on #Shivin
As usual #Manikanda Jing Chuck😮#Myna playing BGM#BiggBossTamil #BiggBossTamil6 #ClownAzeem #Vikraman pic.twitter.com/v7HbQY10l5
#Azeem today: I'm not like this outside, I'm very calm.
— தனி ஒருவன் (@itsThaniOruvan) December 24, 2022
Even those who have worked with him say that he is ditto the same on the outside. Watch this. More different costars also spoke about the same thing on YouTube.#Biggbosstamil #BiggBossTamil6 #VaathiVikraman #Vikraman pic.twitter.com/N0nKsVQ4mh