BP-190.. திடீரென மயங்கி விழுந்த அசீம்.. தூக்கிக் கொண்டு ஓடிய போட்டியாளர்கள்.. வைரல் வீடியோ!
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி, மைனா நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
ஜிபி முத்து மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியேறினார். மெட்டி ஒலி சாந்தி, கானா பாடகர் அசல், ஷெரினா, வி.ஜே.மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் எவிக்ட் ஆகி வெளியேறினர்.
இந்த சீசனில் அசீம் அவ்வப்போது கோபப்படுவது, கத்துவது, சக போட்டியாளர்களுடன் வாக்குவாதத்தில் இருப்பது என இருந்து வருகிறார். இதனால் அவ்வப்போது ரசிகர்கள் மற்றும் போட்டியாளர்களின் வெறுப்பையும் சம்பாதித்து வருகிறார். தற்போது, பழங்குடி மக்கள் - ஏலியன்ஸ் என டாஸ்க் நடைபெற்று வருகிறது.
இந்த டாஸ்க்கின் போது, தனலட்சுமி உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, அசீம் பேசுவதை சட்டை பண்ணாமல் தனலட்சுமி போய்விட்டார். இதனால் அசீம் கூடுதலாக டென்ஷன் ஆனார். முன்னதாக கதிரிடமும் இந்த விளையாட்டு குறித்த தன்னுடைய வியூகத்தை சொல்லும் பொழுது கதிரோ அனைவரின் டிஸ்கஷனையும் தான் ஏற்க முடியும், தனிமனிதரின் முடிவை ஏற்க முடியாது. எந்த பிரச்சினையாக இருந்தாலும் விளையாட்டு முடிந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார்.
ஆனால் அப்போதே பேச வேண்டும் என்று அசீம் கதிரவனை வலியுறுத்தியதால் அவர்களுக்குக்கும் சண்டை உருவானது. அதன் பிறகு கதிரவன் எழுந்து சென்று விட்டார். இந்த நிலையில் தான் சற்றே சாப்பிடாமல் இருந்த அசீம், கார்டன் ஏரியாவில் இருந்திருக்கிறார். வீட்டுக்குள் இருந்த ஏலியன்கள் அவ்வப்போது சாப்பிடுவது உண்டு. ஆனால் கார்டனில் இருக்கும் பழங்குடி அணியினர் உணவு நேரத்தில் மட்டுமே உணவு உண்கின்றனர் என்று சொல்லப்படுகிறது.
இப்படி சாப்பிடாமல் இருந்தது, அதிக டென்ஷன், கோபம், சக்தியின்மை உள்ளிட்டவற்றின் காரணமாக அசீம் திடீரென மயங்கி விட அவரை சக ஹவுஸ் மேட்ஸ் ஓடி வந்து தண்ணீர் தெளித்து தூக்கிக் கொண்டு செல்கின்றனர். அப்போது தான் அவருக்கு உயர் அழுத்தம் 190 வரை தென்படுவதாக சொல்கிறார்கள். இதைத் தொடர்ந்து அசீமுக்கு மெடிக்கல் ரூமில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
இந்த சம்பவத்தை கண்ட ரசிகர்கள் பலரும் அசீம் ஏற்கனவே மிகவும் சோர்வாக இருந்ததால்தான் மயங்கி விழுந்துவிட்டார் என்று கூறி வருகின்றனர். ஆனால், ஒரு சிலர் கூறி தான் கவனிக்கப்பட வேண்டும் என்பதற்காக இப்படி எல்லாம் நாடகம் ஆடுகிறார் என்று கூறி வருகிறார்கள்.
Oh my gosh this is too bad
— thamee_thammu (@thamee_thammu) November 30, 2022
This man suffers a lot💔#biggbosstamil #Azeem #biggboss6 pic.twitter.com/b9oaMtbtuZ