"என்னது Freeze Taskல அசீமை பார்க்க உதயநிதி வராரா?" அசீம் பேச்சை வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

azeem expecting udhayanidhi stalin in freeze task video troll getting viral

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.

azeem expecting udhayanidhi stalin in freeze task video troll getting viral

இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.

azeem expecting udhayanidhi stalin in freeze task video troll getting viral

சிவின் கணேசன், நடிகர் அசீம், நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, ராப் பாடகர் ஏ.டி.கே, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே. கதிரவன், மைனா நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

azeem expecting udhayanidhi stalin in freeze task video troll getting viral

ஜிபி முத்து மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியேறினார். மெட்டி ஒலி சாந்தி, கானா பாடகர் அசல், ஷெரினா, வி.ஜே.மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, மாடல் குயின்சி, ஜனனி, தனலட்சுமி எவிக்ட் ஆகி வெளியேறினர்.

azeem expecting udhayanidhi stalin in freeze task video troll getting viral

தற்போது 75 நாட்களுக்கு மேல் ஆகி, இறுதிப்போட்டி நெருங்கி வரும் நிலையில், தற்போது டி.ஆர்.பி.யை எகிற வைக்கும் விதமாக ஃபிரீஸ்(Freeze) டாஸ்க்கை கொடுத்துள்ளனர். இந்த டாஸ்க்கில், உள்ளே இருக்கும் போட்டியாளர்களின் உறவினர்கள் டாஸ்க்கின் போது வீட்டுக்குள் அனுப்பப்படுவர்.

azeem expecting udhayanidhi stalin in freeze task video troll getting viral

கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக வெளியுலகில் இருந்து யாரையும் பார்க்காமல் இருக்கும் ஹவுஸ்மேட்ஸை உற்சாகப்படுத்தும் விதமாக இந்த டாஸ்க் நடத்தப்படும். இதில் பல எமோஷனல் தருணங்களும் அடங்கி இருக்கும். அந்த வகையில், அசீமை பார்க்க உதயநிதி ஸ்டாலின் மற்றும் கிருத்திகா வருகிறார்களா என நெட்டிசன்கள் மீம் போட்டு வருகின்றனர். அதற்கான காரணம் இதோ..

azeem expecting udhayanidhi stalin in freeze task video troll getting viral

பிக்பாஸ் வீட்டில் சர்ச்சை நாயகனாக வலம் வரும் அசீம் தனது அரசியல் background இருப்பதாக அவ்வப்போது பேசி வருவது வழக்கம். அடிக்கடி விக்ரமனை அவர் ஒரு அரசியல்வாதி என்று சுட்டிக்காட்டி தொடர்ந்து அவரை இழிவு படுத்திவரும் அசீம் தானும் ஒரு அரசியல் பின்பலம் கொண்ட நபர் தான் என்று பேசி வருகிறார். இந்த சீசன் ஆரம்பத்தில் விக்ரம் மற்றும் அசிமிற்கு முதல் வாக்குவாதம் ஏற்பட்டபோது அசீம் விக்கிரமனை பார்த்து வெள்ளை சட்டை போட்டால் நீ என்ன அரசியல்வாதியாடா என்று மிகவும் ஏளனமாக பேசினார்.

azeem expecting udhayanidhi stalin in freeze task video troll getting viral

இதைத்தொடர்ந்து சக போட்டியாளர்களிடம் விக்ரமன் ஏன் தன்னிடத்தில் பேச பயப்படுவார் என்றும், தன்னுடைய அரசியல் பலம் குறித்து பேசிய அசிம் ’விக்ரமன் ஒரு சீரியல் நடிகர் தான். முதலில் அவர் சீரியல்களில் தான் நடித்திருந்தார். அதற்கு பிறகு தான் அவர் அரசியலுக்கு வந்தார். மேலும், என் சித்தப்பா இருக்கும் கட்சியில் அவன் உறுப்பினராக இருக்கிறான்.

azeem expecting udhayanidhi stalin in freeze task video troll getting viral

அதனால் தான் அவன் என்னிடம் சரியாக பேசுவதில்லை என்று கூறி இருந்தார். அதே போல தீபாவளி பண்டிகை முன்பு பேசிய அசீம் ”உதய் அண்ணா மற்றும் கிருத்திகா அண்ணி உங்களை நான் மிஸ் பண்ணுவேன் வருடம் வருடம் உங்களை வந்து நான் பார்ப்பேன். ஆனால், இந்த முறை உங்களை பார்க்க முடியவில்லை. ஹேப்பி தீபாவளி அண்ணா மற்றும் அண்ணி’ என்று பேசி இருந்தார். இப்படி அடிக்கடி தனக்கு அரசியல் பின்புலம் இருக்கிறது என்று சுய தம்பட்டம் அடித்து கொண்ட அசீம், தற்போது தன்னை பார்க்க உதயநிதி வர வேண்டும் என்று எதிர்பார்த்து இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் கேலி செய்து வருகின்றனர்.

Share this post