கையெழுத்து நல்லா இருந்தா போதுமா? இப்டியா தப்பு தப்பா எழுதுறது.. அஸீமை கேலி செய்யும் நெட்டிசன்கள்.
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி, மைனா நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
21 போட்டியாளர்களில் இப்போது 18 போட்டியாளர் உள்ளார்கள். கானா பாடகர் அசல் கோலார், மெட்டி ஒலி சாந்தி உள்ளிட்டோர் ஏவிக்ட் ஆகிவிட்டனர். ஜிபி முத்து மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியேறினார். மேலும், ஷெரினா, வி.ஜே.மகேஸ்வரி எவிக்ட் ஆகி வெளியேறினர்.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள அசீம் முதன் மூன்று வாரம் சக போட்டியாளர்களுடன் சண்டையிட்டு வந்ததால் அவருக்கு ரெட் கார்டு கொடுத்து கமல்ஹாசன் வார்னிங்கும் கொடுத்தார். குறிப்பாக விக்ரமன் மற்றும் ஆயிஷாவை ஒருமையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
கமல் வார்னிங் கொடுத்ததால் கடந்த இரண்டு வாரங்களாக சைலண்டாக இருந்து வந்த அசீம், வேதாளம் முருங்க மரம் ஏறுன கதை போல் மீண்டும் அரண்மனை டாஸ்க் நடந்த போது கத்தி ஆக்ரோஷமாக விக்ரமனுடன் சண்டையிட்டார். இதனால், கடந்த வாரம் இவர் தான் வெளியேறுவார் என போட்டியாளர்கள் நினைத்த நிலையில், நிவாஷினி எவிக்ட் ஆனார். இப்படி அசீம் வாரம் வாரம் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
இருந்தாலும், கமல் திட்டியதற்கு பிறகு அசீம் உடைய நடவடிக்கைகள் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. இந்த வாரம் கோர்ட் டாஸ்க் கொடுக்கப்பட்டதில் அசீம் வக்கீலாக இருக்கிறார். இவர் கதிரவனை கைது செய்து காலில் விலங்கு போட்டு சாவி மறைத்து வைத்த கேஸ் குறித்து விவாதம் செய்கிறார்கள். அப்போது அசீம் கடிதம் ஒன்று எழுதி இருக்கிறார்.
அந்த கடிதத்தை தான் தற்போது ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்து அசீம் கையெழுத்து எவ்ளோ அருமையாக இருக்கிறது என்று புகழ்ந்து வருகிறார்கள் .ஆனால், அந்த கடிதத்தை படித்து பார்த்த பிறகு நெட்டிசன்கள் செய்து வருகின்றனர். எப்போதுமே, அசீம் தமிழ் மீது அதிக ஆர்வம், பற்றுடையவர். நான் தான் தமிழில் அதிகம் பேசிக் கொண்டிருப்பதாக கூறுவார். ஆனால், அந்த கடிதத்தில் நிறைய எழுத்துப் பிழைகளை செய்திருக்கிறார். சொன்னாருக்கு சென்னார், அபாண்டமாக, காழ்புணர்ச்சி போன்ற பல வார்த்தைகளை தவறாக எழுதி இருக்கிறார்.
Arei half boil
— Raja (@whyrajawhy) November 23, 2022
சங்கல்பம் means mudivu
Santharppam means opportunity / circumstance
சங்கல்பம் is not equal to santharppam
Tamil-ah saavadikiraare indha half boil 😭🫠😭😭#BiggBossTamil #BiggBossTamil6 pic.twitter.com/K6i143TZ08