அசீமுடன் ரஷிதா ரகசியமாக செய்ய போகும் வேலை.. கடுப்பாவாரா ராபர்ட் மாஸ்டர்? Viral Video

azeem and rachitha going to perform secret task said by biggboss will robert master will get angry

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.

azeem and rachitha going to perform secret task said by biggboss will robert master will get angry

இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.

azeem and rachitha going to perform secret task said by biggboss will robert master will get angry

பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி, மைனா நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

azeem and rachitha going to perform secret task said by biggboss will robert master will get angry

21 போட்டியாளர்களில் இப்போது 18 போட்டியாளர் உள்ளார்கள். கானா பாடகர் அசல் கோலார், மெட்டி ஒலி சாந்தி உள்ளிட்டோர் ஏவிக்ட் ஆகிவிட்டனர். ஜிபி முத்து மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியேறினார். மேலும், ஷெரினா, வி.ஜே.மகேஸ்வரி எவிக்ட் ஆகி வெளியேறினர்.

azeem and rachitha going to perform secret task said by biggboss will robert master will get angry

கமல் வார்னிங் கொடுத்ததால் கடந்த இரண்டு வாரங்களாக சைலண்டாக இருந்து வந்த அசீம், வேதாளம் முருங்க மரம் ஏறுன கதை போல் தற்போது மீண்டும் கத்தி ஆக்ரோஷமாக விக்ரமனுடன் இந்த டாஸ்க்கின் போது சண்டையிட்டுள்ளார். ராஜாவாக ராபர்ட் மாஸ்டரும், ராணியாக ரக்ஷிதாவும் மந்திரியாக விக்ரமனும், படைத்தளபதியாக அசீமும் உள்ளனர்.

azeem and rachitha going to perform secret task said by biggboss will robert master will get angry

இந்த டாஸ்கில் அவ்வப்போது ராணியாக இருக்கும் ரக்ஷிதாவிடம் தன்னுடைய ரொமான்ஸ் லீலையை காட்டி வரும் ராபர்ட் மாஸ்டர், நிகழ்ச்சியை கலகலப்பாக்கி வருகிறார். ராணியின் சாப்பாட்டில் உப்பு அதிகமாக போட்டதாக அசீம் மற்றும் விக்ரமனுக்கு இடையே சண்டை வந்ததது. மேலும் மீண்டும் அசீம் விக்ரமனை வாயா..போயா.. என மரியாதை இல்லாமல் பேசி இருந்தார். ராணியின் சாப்பாட்டில் அதிகம் உப்பு போட்ட ஷிவின் தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கேட்டார்.

azeem and rachitha going to perform secret task said by biggboss will robert master will get angry

இந்த டாஸ்க்கில் பல பிரச்சனைகள் வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது பிக்பாஸ் அன்ஸீன் ப்ரோமோ மூலம் அசீம் மற்றும் ரக்ஷிதாவுக்கு பிக்பாஸ் கொடுத்துள்ள ரகசிய டாஸ்க் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது “இந்த ராஜ்யத்தின் ஒரு ராஜ ரகசியத்தை தான் சொல்வதாகவும், உங்களுடைய கஜானாவில் உள்ள செல்வங்கள் அனைத்தும் காலி ஆகிவிட்டது. எனவே ராஜ வம்சத்தை சேர்ந்த பொருட்களை களவாடி கஜானாவில் சேர்ப்பது தான் ஒரே வழி. உங்களைத் தவிர ராஜ வம்சத்தை சேர்ந்த இன்னொரு நபருக்கும் இந்த விஷயம் தெரியும்.

azeem and rachitha going to perform secret task said by biggboss will robert master will get angry

இதற்காக மேப் ஒன்றை ரக்ஷிதாவிடம் கொடுத்து, நீங்கள் அடையாளம் காணப்படும் அந்த நபரிடமும் இதேபோன்று ஒரு மேப் இருக்கும் என தெரிவிக்கிறார். பின்னர் ரக்ஷிதா மற்றும் அசீம் இருவரும் இந்த மேப்பை காட்டி கூட்டாளிகள் ஆகின்றனர். ராஜ வம்சத்தின் பொருட்களைத் திருடி கஜானாவில் இவர்கள் இருவரும் சேர்க்க உள்ளதால், சில நாட்கள் ஒன்றாகவே இருக்கக்கூடும். இவர்கள் இருவரும் நெருக்கமாக இருப்பதை பார்த்து ராபர்ட் மாஸ்டர் எப்படி கொந்தளிக்க போகிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Share this post