'எங்க என்னைய கை வச்சு தள்றான் தெரியுமா?' ஆவேசமான தனலட்சுமி.. வீடியோ இதோ !
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, கானா பாடகர் அசல் கோலார், திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, மெட்டி ஒலி சாந்தி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே.மகேஸ்வரி, வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
சண்டைக்கு கொஞ்சம் கூட குறைச்சல் இல்லாமல் அரங்கேறி வருகிறது. தனலட்சுமி, அசீம், விக்ரமன் உள்ளிட்டோர் பெயர் எப்படியாவது வெளியே வந்து விடுகிறது. அப்படி தற்போது, அசீம் மீது தனலட்சுமி கொந்தளித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நடைபெற்று வரும் பொம்மை டாஸ்க்கில் இரண்டு குழுவினராக பிரிந்து ஒருவருக்கொருவர் மோதி வருகின்றனர்.
ஷிவின், தனலட்சுமி உள்பட ஒருசிலர் ஒரு பிரிவிலும், அசீம், மகேஸ்வரி உள்பட ஒரு சிலர் இன்னொரு பிரிவில் உள்ளனர். இந்த இரு பிரிவுகளும் திட்டம் போட்டு ஒருவரை ஒருவர் தாக்கி வருகின்றனர். இந்நிலையில், இன்றைய பொம்மை டாஸ்க்கில் தனலட்சுமி மிக ஆவேசமாக அசீம் மீது குற்றம்சாட்டும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. ‘அவன் என்னை எங்கே கைவைத்து தள்றான் தெரியுமா? அவனை நான் சும்மா விடமாட்டேன்’ என தனலட்சுமி ஆவேசமாகப் பேச தனலட்சுமிக்கு ஆதரவாக விக்ரமன் அசீமிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.
தனலட்சுமியை எங்கே கைவைத்து அசீம் தள்ளிவிடுகிறார் என்பது இன்றைய முதல் புரமோ வீடியோவில் தெரிவதால் அசீமுக்கு இந்த முறை என்ன ஆகும் என தெரியவில்லை. மொத்தத்தில் இந்த பஞ்சாயத்தை தீர்க்க, இந்த வாரம் கொஞ்சம் கடுமையாகவே கமல்ஹாசன் தவறு செய்த போட்டியாளர்களை கண்டிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#Vikraman vs #Azeem 🔥🔥🔥
— Raja (@whyrajawhy) October 26, 2022
Tomorrow’s episode.
Expect more drama tomorrow. #BiggBossTamil #BiggBossTamil6 pic.twitter.com/B280EujZrr
#Day18 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/jRiXF96Yks
— Vijay Television (@vijaytelevision) October 27, 2022