“எனக்கு சரளமா கெட்ட வார்த்தை வரும்.. பேச வெச்சிராத..” ஷிவினிடம் கூறிய ஆயிஷா..!

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடிகை ஆயிஷா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே. கதிரவன், பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி, மைனா நந்தினி உள்ளிட்டோர் தற்போது விளையாடி வருகின்றனர்.
ஜிபி முத்து மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியேறினார். மெட்டி ஒலி சாந்தி, கானா பாடகர் அசல், ஷெரினா, வி.ஜே.மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர். மாடல் குயின்சி எவிக்ட் ஆகி வெளியேறினர்.
இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் ஐகானிக் கேரக்டர்களை ஏற்று அந்த கேரக்டர் போலவே நடை, உடை, பாவனை, ஒப்பனை உள்ளிட்டவற்றை ஏற்று டாஸ்க் செய்து வருகின்றனர். இதில் தான் பலவந்ததால் பாதிக்கப்பட்ட பெண்ணாக ஷிவின் நடிக்க, பலவந்தம் செய்யும் ஆணாக கதிரவனை நடிக்க வைக்கலாம் என்று ஆயிஷா கூறுகிறார். ஆனால் ஷிவினோ, கதிரவனுக்கு ஒரு கரியர் இருக்கிறது, அவருக்கு இது நெகட்டிவாக அமையலாம் என்று மறுக்கிறார். அப்போது இது வெறும் நாடகம் தானே என்று ஷிவினை ஆயிஷா சமாதானப்படுத்த முயல்கிறார்.
ஆனால் ஷிவின் மீண்டும் மீண்டும் மறுக்க, அப்போது ஆயிஷா, “இங்க பார். நான் சரளமாக கெட்ட வார்த்தை பேசுவேன். என்னை கெட்ட வார்த்தை பேச வெச்சிராத. இது வெறும் நாடகம் தான். நான் சொல்வதைக் கேள். அவரும் மீடியாவில் தான் இருந்திருக்கிறார். அவருக்கும் இதெல்லாம் புரியாமல் இல்லை.” என்று சமாதானப்படுத்துகிறார். இதனிடையே அங்கு ஏடிகே வர ஷிவின் பேச்சை நிறுத்திக் கொள்கிறார். ஆனால் ஆயிஷாவோ, “கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் கேமரா வழியே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வேறு யாரும் பார்க்கவில்லை” என்று ஜாலியாக கிண்டல் அடிக்கிறார்.