அசீமுடன் வாக்குவாதத்தின் போது செருப்பை கழட்டிய ஆயிஷா.. வைரலாகும் வீடியோ !
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, கானா பாடகர் அசல் கோலார், திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, மெட்டி ஒலி சாந்தி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே.மகேஸ்வரி, வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
ஆரம்பித்து முழுதாக 1 வாரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில், சண்டைக்கு கொஞ்சம் கூட குறைச்சல் இல்லாமல் அரங்கேறி வருகிறது. அப்படி, ஆயிஷாவை டி போட்டு அசீம் கூப்பிட்டதால், பெரும் சண்டை ஏற்பட்டது. ரேங்கிங் டாஸ்க் நடைபெற்ற சமயத்தில் அசீம், ஆயிஷா குறித்து பேச, ஆயிஷா எதிர்த்து பேச உடனே அசீம் வாடி போடி என தகாத முறையில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என கண்டனங்கள் வலுத்து வருகிறது.
பிரச்சனை தீவிரமடைய, அசீமை அடிக்கடி காலில் உள்ள செருப்பை கழட்டுகிறார் ஆயிஷா. இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது. அதே போல், விக்ரமன் மீது, ஏதோ கோபத்தை வெளிப்படுத்தும் விதமாகவே இவர் இந்த வாரம் முழுவதும் நடந்து கொள்வதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள். நாளைய தினம் இந்த பிரச்சனைகள் குறித்து விசாரிக்க வரும், கமல் அசீமின் செயலுக்கு என்ன செய்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Violance Part
— GP Muthu Army (@drkuttysiva) October 21, 2022
Azeem and Ayeesha#GPMuthuArmy #GPMuthu #BiggBoss #BiggBossTamil6 #BiggBossTamil pic.twitter.com/57XUTEopoQ