மயங்கி விழுந்த ஆயிஷா.. சண்டையை மறந்து தூக்கிக் கொண்டு ஓடிய அசீம்.. பரபரப்பான நிகழ்வு !
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, கானா பாடகர் அசல் கோலார், திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, மெட்டி ஒலி சாந்தி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே.மகேஸ்வரி, வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
ஆரம்பித்து முழுதாக 1 வாரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில், சண்டைக்கு கொஞ்சம் கூட குறைச்சல் இல்லாமல் அரங்கேறி வருகிறது. சென்ற வாரம், ரேங்கிங் டாஸ்கில், அசீம்க்கும் ஆயிஷாவுக்கும் நடந்த சண்டை பிக்பாஸ் வீட்டில் பெரிய சண்டையாக இருந்தது. அதில் அசீம் ஆயிஷாவை வாடி, போடி என்று சொன்னதும், பதிலுக்கு ஆயிஷா அசீமை நோக்கி செருப்பை கழட்டியதும் பரபரப்பானது.
பின்னர் இருவரையும் ஹவுஸ் மேட்ஸ் சமாதானம் செய்தனர். ஆனாலும் வார இறுதியில் அசீம் தன் தவறுகளுக்கும், ஆயிஷா தன் தவறுக்கும் மன்னிப்பு கேட்டனர். இதற்கும் முன்னதாக பிக்பாஸ் வீட்டுக்குள்ளேயே இருவருமே ஒருவருக்கொருவர் மன்னிப்பும் கேட்டிருந்தனர். எனினும் கமல்ஹாசன், அசீம் செய்த தவறு குறித்து அவருக்கு அறிவுரை கூறினார்.
மேலும் நிகழ்ச்சியின் தரத்தை குறைக்காமல் அனைவரும் அனைவரையும் மரியாதையுடன் நடத்துங்கள் என்று கூறியிருந்தார். இந்நிலையில், ஆயிஷா பிக் பாஸ் வீட்டில் மீண்டும் மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார். அவரை உடனே மருத்துவ சிகிச்சை கொடுப்பதற்காக அசீம் தூக்கி சென்றார். இந்த நிகழ்வு பிக்பாஸ் வீட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.