சிவாஜி பட டான்ஸ் ரிகர்சலில் சூப்பர்ஸ்டார்.. என்ன ஸ்டைலு.. ட்ரெண்டாகும் வீடியோ !

Avm productions releases sivaji shooting video to celebrate 15 years of sivaji movie

தமிழ் திரையுலகை பொருத்தவரை சிவாஜி மற்றும் எம்ஜிஆர் அவர்கள் வரிசையில் நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் வைத்திருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களையே. அவரது ஸ்டைல், பேச்சு, நற்குணம் என அனைத்திற்கும் ரசிகர் கூட்டம் என்ன படையே உள்ளது என்பது தான் உண்மை.

Avm productions releases sivaji shooting video to celebrate 15 years of sivaji movie

80ஸ்கள் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றதோடு தலைவர் என ரசிகர்கள் அழைக்கும்படி தனது நற்பண்புகளையும் கொண்டுள்ளவர். பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை என தனது ஸ்டைல் மூலம் மக்கள் மனங்களை வென்றவர்.

Avm productions releases sivaji shooting video to celebrate 15 years of sivaji movie

70 வயது ஆன போதிலும் தனது ஸ்டைல், குணம் என எதுவும் மாறாது இன்னும் அதே சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கிறார். எவ்வளவு பேவரைட் நடிகர்கள் வந்தாலும் இவருக்கான தனி இடத்தை ரசிகர்கள் மாற்றுவதே இல்லை. தற்போது, இவர் நடிப்பில் உருவாகி வரும் தலைவர்169 திரைப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

Avm productions releases sivaji shooting video to celebrate 15 years of sivaji movie

இந்நிலையில், 2007ம் ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வெற்றியடைந்த ‘சிவாஜி’ திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைகிறது. மணிவண்ணன், வடிவுக்கரசி, விவேக், ஸ்ரேயா, சாலமன் பாப்பையா, சுமன் போன்ற பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.

Avm productions releases sivaji shooting video to celebrate 15 years of sivaji movie

பாட்ஷா, படையப்பா படங்களை தொடர்ந்து, சூப்பர்ஸ்டார் அவர்களின் ஸ்டைலை இதில் பார்க்க முடிந்தது. இயக்குனர் ஷங்கர் முதல்முறையாக ரஜினிகாந்துடன் கைகோர்த்து வெளியான படம் ‘சிவாஜி’. பாடல்கள் முதல் பின்னணி இசை வரை ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு மிகச் சிறப்பாக பணியாற்றியிருந்தார்.

Avm productions releases sivaji shooting video to celebrate 15 years of sivaji movie

இந்நிலையில் சிவாஜி படத்தின் 15 வது ஆண்டு கொண்டாட்டத்தின் அம்சமாக, படத்தின் ஷூட்டிங் காட்சிகள் சிலவற்றை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம் வெளியிட்டு உள்ளது. இந்த வீடியோக்கள் செம வைரல் ஆகி வருகிறது.

Share this post