மேஜையில் ஆக்ரோஷமாக அடிக்கும் சீன்.. கொல மாஸ் லுக்கில் சூர்யா.. விக்ரம் பட ஷூட்டிங்கில் இருந்து லீக்கான ஆடியோ!

Audio leaked from vikram shooting about actor suriya role in vikram movie

அரசியல், நடிப்பு, பிக் பாஸ் என பிசியாக வலம் வந்த கமல் ஹாசன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்கும் திரைப்படம் விக்ரம். மாநகரம், கைதி, மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

தற்போது, ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் தயாரிப்பு மற்றும் நடிப்பில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், பிக்பாஸ் சிவானி, தொகுப்பாளினி மகேஸ்வரி மற்றும் மைனா நந்தினி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் விக்ரம்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக கன்னடத்தில் இளம் நடிகையாக வலம் வரும் ஷான்வி ஸ்ரீவஸ்தவா நடித்துள்ளார்.

Audio leaked from vikram shooting about actor suriya role in vikram movie

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து புரோமோஷன் வேலைகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.

இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது. இதற்கிடையே அனிருத் இசையில் விக்ரம் படத்தின் முதல் பாடல் ‘பத்தல பத்தல’ பாடல் நேற்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இப்பாடலை கமல் அவர்களே எழுதி பாடியுள்ளார்.

ரிலீசுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் இந்த படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகிய வண்ணம் உள்ளன. வரும் ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று அதாவது மே 15ம் தேதி மாலை சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

‘விக்ரம்’ படத்தில் ஒரு கேமியோ ரோலில் சூர்யா நடித்துள்ளதாக தகவல் அடுத்தடுத்து வெளியாகி வந்தது. இது உண்மை என்பதனை எடுத்துரைக்கும் வகையில் புகைப்படங்கள், வீடியோ என வெளியானது.

இந்நிலையில் நேற்றிலிருந்து விக்ரம் படத்தில் சூர்யா பேசிய வசனங்கள் ஷூட்டிங் ஸ்பாட் ஆடியோ என ஒரு வாய்ஸ் ரெக்கார்ட் பதிவு இணையத்தில் கசிந்துள்ளது. இந்த பதிவு தற்போது செம வைரலாகி வருகிறது.

இதனிடையே சூர்யாவின் கேரக்டர் குறித்த ஆடியோ ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Audio leaked from vikram shooting about actor suriya role in vikram movie

அந்த ஆடியோவில் ரசிகர் ஒருவர் சூட்டிங் பார்க்க சென்றதாகவும் படத்தின் சூட்டிங்கில் சூர்யா வெள்ளை நிற சட்டையில் ரத்தம் படிய காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

கையில் அரிவாளுடன் அவர் மேஜையில் அடிப்பதாக போன்ற ஆக்ரோஷமான காட்சிகளில் அவர் நடித்துள்ளதாகவும் அந்த ரசிகர் தன்னுடைய நண்பரிடம் சூட்டிங் அனுபவம் குறித்து தொலைபேசியில் இந்த ஆடியோவில் பேசியுள்ளார்.

Audio leaked from vikram shooting about actor suriya role in vikram movie

Share this post