அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தளபதி68'.. தரமான சம்பவம்.. வைரலாகும் பதிவு.. செஞ்சிட்டா போச்சு!

Atlee to direct thalapathy68 rumours spreading on social media

ஒரு சில படங்கள் இயக்கத்திலேயே முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறியவர் அட்லீ.

தனது முதல் படமான ராஜா ராணி படத்தில் ஆரியா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ் உள்ளிட்ட பெரிய பிரபலங்களை வைத்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார்.

Atlee to direct thalapathy68 rumours spreading on social media

இயக்குனர் சங்கர் அவர்களுக்கு அசிஸ்டென்ட் ஆக இருந்த அட்லீ, எந்திரன், நண்பன் போன்ற திரைப்படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

Atlee to direct thalapathy68 rumours spreading on social media

அடுத்த படத்திலேயே விஜய் உடன் தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து, 3 படங்களை விஜய் அவர்களுக்கு வெற்றி படங்களாக அமைத்து தந்தார்.

3 திரைப்படங்களுமே, ரசிகர்கள் ரசிக்கும் விதமாக அமைந்து நல்ல விமர்சனங்களையும், வசூலையும் பெற்றது.

Atlee to direct thalapathy68 rumours spreading on social media

தற்போது, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் படத்தை இயக்க பாலிவுட் பறந்து விட்டார் அட்லீ.

லயன் என்னும் டைட்டிலுடன் உருவாகி வரும் அப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Atlee to direct thalapathy68 rumours spreading on social media

அட்லி மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகிய திரைப்படம் ‘பிகில்’. நயன்தாரா, விவேக், கதிர், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

மேலும், பெண்கள் கால்பந்து அணியில் பிரபல நடிகைகள், இந்துஜா, அம்ரிதா அய்யர், ரெபா மோனிகா ஜான், வர்ஷா பொல்லம்மா, இந்த்ரஜா, காயத்ரி ரெட்டி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

Atlee to direct thalapathy68 rumours spreading on social media

இதில் நடிகர் விஜய் கால்பந்து வீரராகவும், தந்தையாகவும் இரு வேடங்களில் விஜய் நடித்திருந்தார்.

இதில் வயதான தோற்றத்தில் ராயப்பனாக விஜய் வரும் கதாபாத்திரம், பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தது.

Atlee to direct thalapathy68 rumours spreading on social media

மிகவும் வயதான லுக்கில், விஜய் பேசும் வசனங்கள் மற்றும் சண்டைக் காட்சிகள், ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக இருந்து வருகிறது.

மேலும், ராயப்பன் கதாபாத்திரத்தை வைத்து தனியாக ஒரு படத்தை இயக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் இயக்குனர் அட்லிக்கு கோரிக்கை வைத்தும் வந்தனர்.

Atlee to direct thalapathy68 rumours spreading on social media

இதுகுறித்து, OTT தளமான அமேசான் ப்ரைம் ட்வீட் ஒன்றை போட்டிருந்தது. அதில், “ராயப்பனின் கதையை வைத்து மட்டும் ஒரு முழு படம் உருவாகினால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள்” என குறிப்பிட்டு இருந்தது.

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வந்தனர்.

Atlee to direct thalapathy68 rumours spreading on social media

மேலும் அமேசான் பிரைம் செய்த ட்வீட்க்கு பதிலளிக்கும் விதமாக, ராயப்பன் பாணியில் “செஞ்சிட்டா போச்சு” என குறிப்பிட்டிருந்தார். இந்த ட்வீட் அதிக அளவில் லைக்குகளை அள்ளி வந்தது.

Atlee to direct thalapathy68 rumours spreading on social media

பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து, வம்சி இயக்கத்தில் தளபதி66 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இதில் ராஷ்மிகா, யோகி பாபு, ஷாம், சரத் குமார், பிரகாஷ் ராஜ், பிரபு போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, தளபதி67 திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.

Atlee to direct thalapathy68 rumours spreading on social media

தற்போது, அட்லீ, பிகில் ராயப்பன் குறித்த ட்வீட் வெளியான நிலையில், தளபதி68 படத்தை அட்லீ இயக்கப்போகிறார் என சினிமா வட்டாரத்தில் பேசத் துவங்கிவிட்டனர்.

Atlee to direct thalapathy68 rumours spreading on social media

Share this post