அட்லீயின் 'ஜவான்' டீசர் வீடியோல இத்தன படத்தோட காப்பியா.. தூசி தட்டி ஆதாரத்துடன் வெளியிட்ட நெட்டிசன்கள்

Atlee shah rukh khan jawaan copy reference found by netizens

சில படங்கள் இயக்கத்திலேயே முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறியவர் அட்லீ. இவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்களின் அசிஸ்டென்ட் ஆக எந்திரன், நண்பன் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.

Atlee shah rukh khan jawaan copy reference found by netizens

தனது முதல் படமான ராஜா ராணி படத்தில் ஆரியா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ் உள்ளிட்ட பெரிய பிரபலங்களை வைத்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார்.

Atlee shah rukh khan jawaan copy reference found by netizens

அடுத்த படத்திலேயே விஜய் உடன் தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து 3 படங்களை விஜய் அவர்களுக்கு வெற்றி படங்களாக அமைத்து தந்தார். அதன்படி தற்போது, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் படத்தை இயக்க பாலிவுட் பறந்து விட்டார் அட்லீ.

Atlee shah rukh khan jawaan copy reference found by netizens

அட்லி மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகிய திரைப்படம் ‘பிகில்’. இதில் நடிகர் விஜய் கால்பந்து வீரராகவும், தந்தையாகவும் இரு வேடங்களில் நடித்திருந்தார். இதில் வயதான தோற்றத்தில் ராயப்பனாக விஜய் வரும் கதாபாத்திரம், பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தது.

Atlee shah rukh khan jawaan copy reference found by netizens

OTT தளமான அமேசான் ப்ரைம், ராயப்பன் கதையை வைத்து மட்டும் ஒரு முழு படம் உருவாகினால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள் என ட்வீட் செய்யவே, அதற்கு அட்லீ, ராயப்பன் பாணியில் “செஞ்சிட்டா போச்சு” என கூறியிருந்தார். இதனால், தளபதி68 அட்லீ தான் இயக்கப்போகிறாரா என்ற பல தகவல்கள் இணையத்தில் உலா வருகிறது.

Atlee shah rukh khan jawaan copy reference found by netizens

இந்நிலையில், ஷாருக்கான் வைத்து அட்லீ திரைப்படம் இயக்குவது குறித்து பல தகவல் வெளியானது. இன்று, ஷாருக்கானின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லி ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், அட்லீ ஷாருக்கானை வைத்து படம் இயக்குவது குறித்தும், படத்தின் பெயர் ஜவான் எனவும் வீடியோவுடன் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Atlee shah rukh khan jawaan copy reference found by netizens

வித்தியாசமான லுக்கில் ஷாருக்கான் இருப்பது, அந்த தோரணை அனைத்தும், பார்க்கையில் இதுவும் அட்லீக்கு பிளாக்பஸ்டராக அமையும் என தெரிகிறது. மேலும், படம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் இந்த டீசரில் பல திரைப்படங்களின் காப்பி இருப்பதாக நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Atlee shah rukh khan jawaan copy reference found by netizens

பொதுவாக இயக்குனர் அட்லி இயக்கும் திரைப்படத்தில் ஏதாவது ஒரு திரைப்படத்தின் சாயல் கண்டிப்பாக இருக்கும் என்பது பொதுவாக ரசிகர்கள் பேசக்கூடிய கருத்து. இதனால் நெட்டிசன்கள், மீம் க்ரியேட்டர்கள் அவரை காப்பி இயக்குனர் என கிண்டலடித்து வந்தனர்.

ஆனால் பாலிவுட்டில் அப்படி இருக்காது என நினைத்து வந்த நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் டீசர் பல படங்களை நினைவுப்படுத்துகிறது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Atlee shah rukh khan jawaan copy reference found by netizens

இந்த டீசரின் பின்னணி இசை பிகில் படத்தில் வரும் மியூசிக் போன்றும், துப்பாக்கி சத்தம் போன்றவை விக்ரம் ட்ரைலர் போன்றும் இருக்கிறது என சொல்லப்படுகிறது.

Atlee shah rukh khan jawaan copy reference found by netizens

மேலும் எஸ் ஜே சூர்யா, மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ஸ்பைடர் திரைப்படத்தின் ஒரு காட்சியில் எஸ்ஜே சூர்யா முகத்தில் கோணியை கட்டிக் கொண்டு வருவார். அதே போல, இந்த வீடியோவில் ஷாருக் வருவது எல்லாம் சுட்டிக்காட்டி கலாய்த்து வருகின்றனர்.

Atlee shah rukh khan jawaan copy reference found by netizens

Share this post