ஹாப்பி நியூஸ் சொன்ன அட்லீ - பிரியா ஜோடி.. குவியும் வாழ்த்து.. வைரலாகும் cute photos

atlee and priya atlee to be parents soon photos and announcement pose getting viral on social media

சில படங்கள் இயக்கத்திலேயே முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறியவர் அட்லீ. இவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்களின் அசிஸ்டென்ட் ஆக எந்திரன், நண்பன் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.

atlee and priya atlee to be parents soon photos and announcement pose getting viral on social media

தனது முதல் படமான ராஜா ராணி படத்தில் ஆரியா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ் உள்ளிட்ட பெரிய பிரபலங்களை வைத்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார்.

atlee and priya atlee to be parents soon photos and announcement pose getting viral on social media

அடுத்த படத்திலேயே விஜய் உடன் தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து 3 படங்களை விஜய் அவர்களுக்கு வெற்றி படங்களாக அமைத்து தந்தார். அதன்படி தற்போது, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் படத்தை இயக்க பாலிவுட் பறந்து விட்டார் அட்லீ.

atlee and priya atlee to be parents soon photos and announcement pose getting viral on social media

இயக்கம் மட்டுமல்லாம் மனைவி பிரியா அட்லீயுடன் இணைந்து ‘A for Apple Productions’ என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். அவரது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் வெளியான சங்கிலி புங்கிலி கதவ தொற, அந்தகாரம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது.

atlee and priya atlee to be parents soon photos and announcement pose getting viral on social media

இயக்குனர் அட்லீ, தனது காதல் மனைவி பிரியாவை கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி கரம்பிடித்தார். தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்தது. இந்த தம்பதி தங்களது வாழ்கையின் அடுத்தகட்டத்திற்கு செல்லவிருக்கின்றனர். தங்களது குடும்பத்திற்கு புதிதாக ஒரு உறுப்பினரை சேர்க்க போகும் மகிழ்ச்சியில் இருவரும் திளைத்து இருக்கின்றனர்.

atlee and priya atlee to be parents soon photos and announcement pose getting viral on social media

இயக்குனர் அட்லீ மற்றும் பிரியா அட்லீ இருவரும் பெற்றோர்கள் ஆக போகிறார்கள் என்ற செய்தியை ரசிர்கர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். எங்களுக்கு கொடுத்த இந்த அன்பையும் ஆதரவையும், ஆசீர்வாதத்தையும் எங்கள் குழந்தைக்கும் நீங்கள் கொடுக்க வேண்டும் என் கூறி இவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Share this post