அட.. நடிகை அசின் மகளா இது..? அம்புட்டு க்யூட்.. போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

Asin daughter arin photo getting viral on social media

தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை அசின். விளம்பர படங்களில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆன அசின், தெலுங்கு மொழியில் நடித்ததன் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.

Asin daughter arin photo getting viral on social media

தமிழ் மொழியில் M. குமரன் சன் ஆப் மஹாலக்ஷ்மி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அசின், உள்ளம் கேட்குமே, கஜினி, சிவகாசி, போக்கிரி போன்ற பிரபல திரைப்படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வந்த இவர், திடீரென பாலிவுட் மொழி வாய்ப்புகள் வரவே, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார்.

Asin daughter arin photo getting viral on social media

2016ம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் கம்பெனியின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர், நடிப்பிற்கு டா டா சொல்லிவிட்டு தற்போது, குழந்தை குடும்பம் என செட்டில் ஆகிவிட்டார். இவர்களுக்கு 2017ம் ஆண்டு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.

Asin daughter arin photo getting viral on social media

தற்போது அசின் மகள் அரினுக்கு 4 வயது ஆகும் நிலையில், அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் அசினுக்கு இவ்வளவு பெரிய மகளா என கேட்கும் அளவிற்கு மளமளவென வளர்ந்துவிட்டார். அந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகின்றன.

Asin daughter arin photo getting viral on social media

Asin daughter arin photo getting viral on social media

Share this post