மேடையில் கண்கலங்கி தடுமாறிய அஸ்வின்.. தட்டி கொடுத்த கமல்.. வைரலாகும் வீடியோ!

ashwin kumar stumbled in sembi audio launch kamal advises and appreciates viral video

கோவையில் பிறந்து வளர்ந்த அஸ்வின், நடிப்பின் மீதுகொண்ட ஆர்வத்தினால், விடா முயற்சி எடுத்து சினிமா துறையில் தனக்கென்று ஒரு இடம் பிடித்து ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபிஸ் தொடரில் துணை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தனது கலை பயணத்தை தொடங்கியவர்.

ashwin kumar stumbled in sembi audio launch kamal advises and appreciates viral video

இதனைத் தொடர்ந்து, ரெட்டை வால் குருவி, நினைக்க தெரிந்த மனமே போன்ற தமிழ் சீரியல் தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். மேலும், சரவணன் மீனாட்சி தொடரின் ரீமேக் ஸ்டார் மா சேனலில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரிலும் முக்கிய வேடத்தில் நடித்தார்.

ashwin kumar stumbled in sembi audio launch kamal advises and appreciates viral video

பின்னர், பிளிங்க், சிண்ட்ரெல்லா, 3 சீன்ஸ் ஆஃப் ஹிஸ் லவ் ஸ்டோரி, காதல் ஒன்று கண்டேன் போன்ற குறும்படங்களில் நடித்தார். இதன் மூலம் சமூக வலைத்தளங்களில் செம பேமஸ். விஜய் தொலைக்காட்சியில், குக் வித் கோமாளி மூலம் சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்த அஸ்வின், இந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை அவருக்கு உண்டாக்கியது.

ashwin kumar stumbled in sembi audio launch kamal advises and appreciates viral video

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 2வது இடத்தை பிடித்தார். இதற்கு பின்னர், பட வாய்ப்புகளும் பெற துவங்கிய இவர் ம்யூசிக் வீடியோவிலும் நடித்து வருகிறார். குட்டி பட்டாசு, யாத்தி யாத்தி, பேபி நீ சுகரு என மியூசிக் வீடியோக்கள் இவர் நடிப்பில் பெரும் ஹிட் அடித்தது.

ashwin kumar stumbled in sembi audio launch kamal advises and appreciates viral video

ஓ காதல் கண்மணி, ஆதித்யா வர்மா போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான என்ன சொல்ல போகிறாய் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில், தற்போது, மைனா, கும்கி போன்ற வெற்றி படங்களை தந்த பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியாகவுள்ள செம்பு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ashwin kumar stumbled in sembi audio launch kamal advises and appreciates viral video

கோவை சரளா, தம்பி ராமையா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கோவை சரளா கெட்அப் வித்தியாசமாக இருக்கும் நிலைமையில் படத்தின் எதிர்பார்ப்பை கூட்டியது. செம்பி படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றது.

ashwin kumar stumbled in sembi audio launch kamal advises and appreciates viral video

இந்நிலையில், இந்த படத்தில் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கமல் கலந்துகொண்டார். மேலும், இந்த விழாவை ஈரோடு மகேஷ் தொகுத்து வழங்கி இருந்தார். அவர் அஸ்வினை மேடைக்கு அழைக்கும் போது அவருக்கு ஆதரவாக பேசிவிட்டு பின்னர் அவர் மேடை ஏறும் போது ‘நல்லா பாராட்டி இருக்கிறேன் 2 நிமிஷத்தில் முடித்து என் கௌரவத்தை காப்பாற்று’ என்று கூறியிருந்தார்.

ashwin kumar stumbled in sembi audio launch kamal advises and appreciates viral video

ஏனெனில், இவர் முதன் முறையாக ‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து இருந்தார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அஸ்வின் பேசிய பேச்சு கேலிக்கு உள்ளாகி பல சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்து அஸ்வினும் மன்னிப்பு கேட்டு விளக்கம் கொடுத்து இருந்தார்.

ashwin kumar stumbled in sembi audio launch kamal advises and appreciates viral video

இதனால் சற்று பதட்டமாக இந்த விழாவில் பேசிய அஸ்வின் ‘பிரபு சாலமன் சாரை நான் சந்தித்தபோது இந்த படத்தில் என்னை நடிக்க வைப்பது உங்களுக்கு ஓகேவா சார் என்றேன். ஏனென்றால் இந்த படத்தின் ஷூட்டிங் செல்லும்போது என்னுடைய பயணம் மிகவும் மோசமாக இருந்தது என்று பேச முடியாமல் பேசினார் அஸ்வின். இதற்கு தட்டி கொடுக்கும் வகையில் கமல் பேசி இருந்தார்.

Share this post