பெண் போட்டியாளரை கட்டிப்பிடித்து தூக்கிய அசல்.. முகம்சுளிக்க வைக்கும் வீடியோ !
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, கானா பாடகர் அசல் கோலார், திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, மெட்டி ஒலி சாந்தி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே.மகேஸ்வரி, வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
ஆரம்பித்து முழுதாக 1 வாரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில், சண்டைக்கு கொஞ்சம் கூட குறைச்சல் இல்லாமல் அரங்கேறி வருகிறது. கடந்த சில நாட்களாக அசல் செய்யும் சில சேட்டைகள் குறித்து சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகிறது. அவர் பெண்களிடம் தவறாக நடந்துகொள்கிறார் என்பது மக்களின் பெரிய கோபமாக உள்ளது.
பெண்களிடம் சில்மிஷம் செய்துவரும் அசல் கோளாறு தனலட்சுமியை பார்த்து உருவ கேலி செய்துள்ளார். தினமும் ஒவ்வொரு பெண் போட்டியாளர்களிடம் அத்துமீறி வருகிறார் அசல் கோலார் என குற்றச்சாட்டுக்கள் அடுக்கப்பட்டு வரும் நிலையில், லேட்டஸ்ட்டாக ஜனனியின் முதுகில் அசல் கோலார் கோலம் போட்டுள்ளார் என போட்டோவை ஷேர் செய்து பிக் பாஸ் ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.
அசல் கோலாரை அண்ணன் சொன்னதற்காக பிரச்சனை கிளம்பிய நிலையில், லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய தனலட்சுமி மாதிரியான ஆட்கள் தான் இவனுக்கு சரி என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு அசல் கோலாரை வெளியே அனுப்ப வேண்டும் என்றும் கமல் சார் கண்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
அசல் கோலாரை வைத்து ஏகப்பட்ட மீம்களும் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன. குயின்ஸியும் அசல் கோலாரை முறைத்த காட்சியை பதிவிட்டு, சச்சின் படத்தில் வடிவேலை நோக்கி செருப்பை காட்டும் சீனை போட்டு பிக் பாஸ் வீடுன்னு பார்க்கிறேன் என பங்கம் பண்ணி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு நிவாஷினி நீச்சல் குளத்தில் தூக்கி கொண்டு போட்டுவிடுவேன் என்று அசல் கோளார் கூறியுள்ளார். இதற்கு நிவாஷினி அது முடியாது என்று கூற அவரை அப்படியே தூக்கி விட்டார் அசல் கோளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும், அசல் கோளார் நடந்துகொள்ளும் விதம் சரியில்லை என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
😳😳 Kolaaruuu #Asalkolaar #GPMuthuArmy #GPMuthu #BiggBossTamil #BiggBossTamil6 #BiggBoss pic.twitter.com/neKeZMMh7G
— GP Muthu Army (@drkuttysiva) October 22, 2022