தனலட்சுமி பேசும்போது ஆபாசமான வார்த்தை பேசினாரா அசல்? வைரலாகும் வீடியோ.
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, கானா பாடகர் அசல் கோலார், திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, மெட்டி ஒலி சாந்தி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே.மகேஸ்வரி, வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
சண்டைக்கு கொஞ்சம் கூட குறைச்சல் இல்லாமல் அரங்கேறி வருகிறது. கடந்த சில வாரங்களாக அசல் செய்யும் சில சேட்டைகள் குறித்து சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகிறது. அவர் பெண்களிடம் தவறாக நடந்துகொள்கிறார் என்பது மக்களின் பெரிய கோபமாக உள்ளது.
பெண்களிடம் சில்மிஷம் செய்துவரும் அசல் கோளாறு தனலட்சுமியை பார்த்து உருவ கேலி செய்துள்ளார். தினமும் ஒவ்வொரு பெண் போட்டியாளர்களிடம் அத்துமீறி வருகிறார் அசல் கோலார் என குற்றச்சாட்டுக்கள் அடுக்கப்பட்டு வருகிறது. பிக்பாஸ் ரசிகர்கள் சிலர் அசல் கோளாறை வெளியேற்ற வேண்டும் என கூறி வருகிறார்கள். இவர் நாமினேஷனின் சிக்கினால் இவரை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என சிலர் துடித்து துடித்து கொண்டிருக்கின்றனர்.
கடந்த வாரம், இது குறித்து நேரடியாக கமல் கூறாமல், சூசகமாக சொல்லியும் திருந்தாமல், நிவாஷினியை தோலில் கடிப்பது, படுக்கையில் நிவாவுடன் லீலைகளில் ஈடுபட்டது என எல்லைமீறி சென்று வருகிறது. இதனால் இவரை ரெட் கார்ட் கொடுத்து அனுப்ப வேண்டும் என்று பலர் கூறி வருகின்றனர். இந்நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்களிடம் பொம்மை டாஸ்க்கில் காப்பாற்றப்பட்ட பொம்மைகள் குறித்து கேள்வி கேட்டிருந்தார்.
அதற்கு சிவின் அவர்கள் அசலிடம் இருந்த அசீம் பொம்மையை வெளியேற்ற நினைத்தோம். காரணம், அவருடைய விளையாட்டில் நேர்மை இல்லை என்று கூறி இருந்தார். பின் தனலட்சுமி, அவருக்கு ஒரு காரியம் வேணும் என்றால் மெதுவாக பேசுகிறார். அந்த காரியம் நம்மிடம் இல்லை என்றால் வேற மாதிரி நடந்து கொள்கிறார். அந்த விஷயம் எனக்கு பிடிக்கவில்லை. அதனால் அவருடைய பொம்மையை தடுக்க நினைத்தேன் என்று கூறியிருந்தார். அப்போது அசல் மோசமாக வார்த்தை கூறி படு ஆபாசமாக பேசி இருக்கிறார். அந்த வீடியோ செம வைரலாகி வருகிறது.
This #AsalKolar is clearly saying D*****a M***a when Dhana is speaking. @ikamalhaasan are you going to allow this foul mouthed guy to abuse a woman on your show ?? #BiggBossTamil6 #dhanalakshmi pic.twitter.com/r4BWLdrbgO
— Biggbosser (@Biggbosser1) October 28, 2022