குயின்சி, மகேஸ்வரியை தொடர்ந்து நந்தினியிடம் தன் லீலைகளை காட்டிய அசல்.. வைரல் வீடியோ
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, கானா பாடகர் அசல் கோலார், திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, மெட்டி ஒலி சாந்தி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே.மகேஸ்வரி, வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
ஆரம்பித்து முழுதாக 1 வாரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில், சண்டைக்கு கொஞ்சம் கூட குறைச்சல் இல்லாமல் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், போட்டியாளர்களில் ஒருவரான அசல் கோளாறு மீது நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். குயின்சியின் கையை தடவியதைக் கண்டு கொந்தளித்த அவர்கள், தற்போது மகேஸ்வரியின் காலை அசல் கோளாறு தடவியதை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
26 வயது ஆகும் அசல் கோளாறு சென்னையை சேர்ந்த கானா பாடகர். இவர் ஜோர்த்தாலே என்ற பாட்டை பாடி மிகப் பிரபலமானார். சாதாரணமான கானா பாடலை வேகமாக பாடி அதன் பீட்டுகளை மாற்றி மக்களை மகிழ்வித்து வந்த ஒருவராக இவர் இருந்தார். அதனால் இவருக்கு பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
இவர் இங்கு பெண் போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம், பலருக்கும் முக சுளிப்பை ஏற்படுத்தி வருகிறது. குயின்சி கையை தடவியது, ஆயிஷாவின் கைகளை பிடித்து ஏதோ செய்தது, நிவாசினி தலையை பிடித்து தடவினார். இதை பார்த்த பலரும் இவன் சரியான பொம்பளை பொறுக்கி என்றெல்லாம் கடுமையான வார்த்தைகளால் திட்ட தொடங்கினர்.
இந்நிலையில், பிக்பாஸ் வாசலின் அருகே காலையில் எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, அப்போது மகேஸ்வரியின் அருகில் அசல் கோளாறு அமர்ந்திருந்தார். அப்போது கிழிந்த வகையில் ஜீன்ஸ் பேண்ட் போட்டு இருந்த மகேஸ்வரியின் கால் முட்டியை அசல் கையால் தடவிக் கொண்டிருந்தார். அப்போது மகேஸ்வரி அதை தட்டி விட்டபோதிலும், அவர் விடாமல் அதை செய்து கொண்டிருந்தார்.
பிறகு பாத்ரூம் ஏரியாவில் அமர்ந்து கொண்டு மைனாவின் கையைக் பிடித்து எதை செய்து கொண்டிருந்தார். இதுபோன்று தொடர்ந்து அவர் பெண்களிடம் சில்மிஷம் செய்கிறார் என்று அவருக்கு எதிராக கண்டனங்கள் வலுக்க தொடங்கி இருக்கிறது. அவரை ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை எடுத்து வருகின்றனர்.
#AsalKolar #GPMuthuArmy #GPMuthu #BiggBoss #BiggBossTamil6 #BiggBossTamil #BiggBossTelugu6 #BiggBoss16 #Varisu#Thunivu pic.twitter.com/1hgHhYx9JI
— Biggboss Videos (@Biggboss_videos) October 18, 2022
#AsalKolar #GPMuthuArmy #GPMuthu #BiggBoss #BiggBossTamil6 #BiggBossTamil #BiggBossTelugu6 #BiggBoss16 #Varisu#Thunivu pic.twitter.com/dXeIph8sSz
— Biggboss Videos (@Biggboss_videos) October 18, 2022
Adei ennada pannura 😡 #Asal #BiggBossTamil6 #BiggBoss pic.twitter.com/k4Uu95p6BH
— Bigg Box (@ThugKingRaju) October 17, 2022