Captain Trailer : 50 வருஷமா ஆள் நடமாட்டமே இல்ல.. அப்போ அது யாரு.. ஏலியனா.. அசத்தும் ட்ரைலர் வீடியோ !
இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஷக்தி செளந்தர் ராஜன். இவர் கடந்த 2010ம் ஆண்டு பிரசன்னா நடிப்பில் வெளியான நாணயம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
இதையடுத்து, நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக், டெடி போன்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கினார். இவ்வாறு தொடர்ந்து, ஹாலிவுட் தரத்திலான படங்களை தமிழில் இயக்கி வரும் இயக்குனர் ஷக்தி செளந்தர் ராஜன், தற்போது இயக்கியுள்ள படம் கேப்டன்.
ஹாலிவுட்டின் பிரிடேட்டர் பட பாணியில் ஏலியன்களை வைத்து ஒரு வித்தியாசமான படமாக இதனை உருவாக்கி உள்ளார் ஷக்தி. இதில் நடிகர் ஆர்யா ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார்.
இந்நிலையில், கேப்டன் படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலர் வெளியாகியுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள், ஹாலிவுட் ரேஞ்சில் இருப்பதாக பாராட்டி வருகின்றனர். கேப்டன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 8ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது.