மனைவி இறந்து ஒரே வருடத்தில் அருண் ராஜா காமராஜ் 2ம் திருமணம்? வைரலாகும் திடீர் முடிவு!
சிவகார்த்திகேயன் முதல் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கிய முதல் திரைப்படம் கனா. இதனைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை இயக்கினார். இயக்குனராக அறிமுகமாவதற்கு முன்பே, ராஜா ராணி, மான் கராத்தே, பென்சில், ரெமோ, மரகத நாணயம், யானும் தீயவன், கா பெ ரணசிங்கம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
நிறைய திரைப்பட பாடல்களை எழுதியும், சில பாடல்களை பாடியும் பன்முக கலைஞராக தமிழ் திரையுலகில் வலம் வருகிறார். இவர் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் நெருங்கிய நண்பர் ஆவார். சின்னத்திரை தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர் அருண்ராஜா காமராஜ்.
கடந்த ஆண்டு அருண்ராஜா மனைவி சிந்துஜா கொரானா பாதிப்பால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரு பிள்ளைகள் இருக்கும் நிலையில், மனைவியின் பிரிவு அவருக்கு பெரிய சோகத்தை கொடுத்தது. இந்நிலையில் கடந்த அக்டோபர் 28ம் தேதி அருண் ராஜா காமராஜ் 2ம் திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி வெளியாகி உள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் தெரியவரும்.