‘உன்ன நிரூபிக்க சேரிய ஏன் கொச்சைப்படுத்தற’ வறுத்தெடுத்த நெட்டிசன்கள்.. மன்னிப்பு கேட்ட அர்னவ்.
சன் டிவியில் ஒளிபரப்பான ‘கேளடி கண்மணி’ சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை திவ்யா ஸ்ரீதர் மற்றும் நடிகர் அர்ணவ். இந்த சீரியலில் நடித்த போது ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் காதலாக மாறியது. சுமார் 5 வருடங்களாக லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் இருந்த இவர்கள், திவ்யா கர்ப்பமான பின்னர் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் கூட தங்களின் திருமண புகைபடங்களை திவ்யா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, இரண்டு மாதம் கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டிருந்தார். மேலும் திவ்யா, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி என்கிற தொடரிலும், அர்ணவ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘செல்லம்மா’ என்கிற தொடரிலும் நடித்து வருகிறார்.
திருமண செய்தி அறிவித்து ஒரு சில நாட்களிலேயே திவ்யா திடீர் என, தன்னை கணவர் அர்ணவ் அடித்து துன்புறுத்தியதில், வயிற்றில் அடிபட்டு குழந்தை எந்நேரமும் கலையலாம் எனவும், இன்னொரு பெண்ணுடன் உறவில் இருப்பதாகவும், நிறைய புகார்களை பிரஸ் முன் பேட்டியாக கூறியிருந்தார். இதற்கு திவ்யாவின் கணவர் அர்ணவ் , இந்த புகாரை மறுத்துள்ளளோடு , 3 மாத கர்ப்பத்தை கலைப்பதற்காகவே திவ்யா பொய் புகார் அளித்துள்ளதாக கூறி ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
மேலும், அர்னவ் பேட்டியில், இந்த பிரச்சனைக்கு எல்லாம் நடிகர் ஈஸ்வர் தான் காரணம் அவன் தான் எங்களுக்குள் இருந்த சிறு பிரச்சனைகளை எல்லாம் பெரிதுபடுத்திவிட்டார் என்று கூறி இருந்தார். மேலும், அவன் ரொம்ப கெட்ட வார்த்தைகளை பேசுகிறார். நான் சேரியில் இருந்து வந்தேனா, இல்லை அவன் சேரியில் இருந்து வந்தானா என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு ரொம்ப மோசமாக பேசுகிறார் என்று கூறியிருந்தார்.
இதற்கு, சேரியில் பிறந்தவர்கள் எல்லாம் கேவலமா என்று ஆர்ணவ்வை பலரும் உன் யோகியத்தை நிரூபிக்க சேரிய ஏண்டா கொச்சைப்படுத்தற’ என்று திட்டி தீர்த்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த சர்ச்சையை தொடர்ந்து தான் பேசிய வார்த்தைக்கு மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் ஆர்ணவ். இதுகுறித்து, அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
உன் யோக்கியதையை நிருபிக்க சேரியை ஏன்டா கொச்சைபடுத்துற பன்னி பயலே!!
— பூ.மா மணி பையன் (@poomaa_Official) October 10, 2022
இதுல படிச்சவன்னு விளக்க மானா வேற..!
🤦 pic.twitter.com/Y7adfWJPQn
த்தா யார் இந்த நாய்😡 https://t.co/PKOsV4hv7Q
— 🌾கவிகண்ணா🌾 (@FriendsOfVck) October 10, 2022