அக்காவை தொடர்ந்து காதலில் பிரபல வாரிசு நடிகரின் 2-வது மகள்?.. வைரலாகும் புகைப்படம்..!

arjun-second-daughter-anjana-arjun-boyfriend-photo

ஒரு காலத்தில் ஹீரோவாக நடித்து வந்த ஆக்சன் கிங் அர்ஜூன் தற்போது வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துவருகிறார். நடிகர் அர்ஜுன் தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் பிரபல நடிகராக வலம் வருகிறார்.

இவருக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என இரண்டு மகள்கள் உள்ளன. சமீபத்தில், இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது, திருமண விழாவில் முக்கிய அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

திருமண புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளத்தில் வைரலானது. தற்போது, இரண்டாவது மகள் அஞ்சனா குடும்பத்தினருடன் இருக்கும் சில புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில் புது நபர் ஒருவர் இருக்கிறார். அவர்தான் உங்களின் காதலரா என நெட்டிசன்கள் அவரிடம் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால், இது குறித்த அஞ்சனா அர்ஜுன் எந்த பதிலும் அளிக்கவில்லை.

Share this post