'எல்லா கெட்ட வார்த்தைலயும் திட்னாங்க..' Depressionக்கு சிகிச்சை.. கலங்கிய அறந்தாங்கி நிஷா.. Viral Video

Aranthangi nisha undergone treatment for stress due to abusive words after biggboss neeya naana video viral

புதுக்கோட்டை அருகே அறந்தாங்கி என்னும் ஊரை பூர்வீகமாக கொண்ட நிஷா, விஜய் தொலைக்காட்சியில் பிரபலம் ஆன கலக்கப்போவது யாரு சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் பிரபலம் ஆனவர்.

Aranthangi nisha undergone treatment for stress due to abusive words after biggboss neeya naana video viral

இதனைத் தொடர்ந்து, ரசிகர்கள் மத்தியில் நல்ல பரிச்சயம் பெற்ற நிஷா, சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் நடிகையாகவும் பிரபலம் ஆனார்.

Aranthangi nisha undergone treatment for stress due to abusive words after biggboss neeya naana video viral

கோலமாவு கோகிலா, மாரி 2, ஆண் தேவதை, கலகலப்பு 2 போன்ற திரைப்படங்களில் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்தார். பின்னர், குக் வித் கோமாளி, மிஸ்டர் & மிஸ்ஸஸ் சின்னத்திரை போன்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வந்தார்.

Aranthangi nisha undergone treatment for stress due to abusive words after biggboss neeya naana video viral

இதன் மூலம், இவருக்கு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் இவருக்கு நிறைய நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தது. குறிப்பாக இவரது நிறைய செயல்கள் ட்ரோல் செய்யப்பட்டன.

Aranthangi nisha undergone treatment for stress due to abusive words after biggboss neeya naana video viral

இந்நிலையில், நீயா நானா நிகழ்ச்சியில் பெண் பிரபலங்கள் மற்றும் அவர்களது கணவர்கள் பங்கேற்றிருந்தனர். அப்போது, நிஷா பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்து வெளி வந்த பிறகு மனரீதியாக எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டதாக அவரது கணவர் கூறினார்.

Aranthangi nisha undergone treatment for stress due to abusive words after biggboss neeya naana video viral

ஜாலியாக கலகலப்பாக பேசக்கூடிய நிஷா, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு, ஒரு கேள்வி கேட்டால் அதற்கு பதில் வரவே 20 நிமிடங்கள் ஆகிவிடும். அந்த அளவுக்கு depression & stress . அவரை மருத்துவமனை கூட்டி சென்று சகஜ நிலைக்கு கொண்டு வரவே 45 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது.

Aranthangi nisha undergone treatment for stress due to abusive words after biggboss neeya naana video viral

அது பற்றி பேசிய நிஷா “எல்லா கெட்ட வார்த்தைகளிலும் திட்னாங்க, இனி திட்டவேண்டும் என்றால் புது வார்த்தைகள் தான் கண்டுபிடிக்க வேண்டும். அந்த அளவுக்கு திட்னாங்க. ஆண்களை திட்ட வேண்டும் என்றால் உடல் உருவம் பற்றி திட்டுவதில்லை. ஆனால் பெண்களை பற்றி உடலை குறிப்பிட்டு தான் திட்டுகிறார்கள்” என கண்ணீர் விட்டார்.

Share this post