தமிழிசையை கேலி.. கிண்டல் செய்ததற்கு கிளம்பிய எதிர்ப்பு.. மன்னிப்பு கேட்ட நிஷா.. வைரலாகும் பழைய வீடியோ
புதுக்கோட்டை அருகே அறந்தாங்கி என்னும் ஊரை பூர்வீகமாக கொண்ட நிஷா, விஜய் தொலைக்காட்சியில் பிரபலம் ஆன கலக்கப்போவது யாரு சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் பிரபலம் ஆனவர். இதனைத் தொடர்ந்து, ரசிகர்கள் மத்தியில் நல்ல பரிச்சயம் பெற்ற நிஷா, சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் நடிகையாகவும் பிரபலம் ஆனார்.
கோலமாவு கோகிலா, மாரி 2, ஆண் தேவதை, கலகலப்பு 2 போன்ற திரைப்படங்களில் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்தார். பின்னர், குக் வித் கோமாளி, மிஸ்டர் & மிஸ்ஸஸ் சின்னத்திரை போன்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வந்தார்.
இதன் மூலம், இவருக்கு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் இவருக்கு நிறைய நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தது. குறிப்பாக இவரது நிறைய செயல்கள் ட்ரோல் செய்யப்பட்டன. சமூக வலைதளத்தில் அதிகம் விமர்சிக்கப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினரையும் கேலி மற்றும் ட்ரோல் செய்து வந்தனர்.
இதனால் நிஷா மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார். பின் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் நிஷா தன் கேரியரில் கவனம் செலுத்தி வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நிஷா கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ராமருடன் காமெடி செய்து இருந்தார். அதன் பின் இவர் பல நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். இதனால் இவர் மீது இருந்த விமர்சனம் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்தது. மேலும், நிஷா தனியாக யூடியூப் சேனல் ஒன்றை துவங்கி இருக்கிறார்.
அதில் இவர் வெளியிடும் காமெடி வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது. அதோடு இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியை தொகுத்தும், படங்களில் பிசியாக நடித்தும் வருகிறார். இந்நிலையில் பிஜேபி தமிழிசையை கிண்டல் செய்து பேசியதற்கு அறந்தாங்கி நிஷா மன்னிப்பு கேட்ட வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதாவது, மேடை நிகழ்ச்சி ஒன்றில் நிஷா அவர்கள் தமிழிசை குறித்து கிண்டல் செய்து பேசியிருந்தார். அதிலும், அவர் தாமரை மலரும் மலரும் என்று சொல்கிறார். அவருக்கு படர்தாமரைதான் வளரப்போகிறது என்று ஏளனமாக பேசி இருந்தார். இது குறித்து பலருமே கண்டனம் தெரிவித்து இருந்தார்கள். இதனை அடுத்து அறந்தாங்கி நிஷா, மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், எனக்கும் தமிழிசை அக்காவுக்கும் எந்த ஒரு பிரச்சினையும் கிடையாது. நான் பேசியது தவறுதான். இனிமேலும் இந்த தவறை திரும்பச் செய்ய மாட்டேன் என்று மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.
— chettyrajubhai (@chettyrajubhai) November 13, 2022