Viral Video: 'கையிலே ஆகாசம்.. கொண்டு வந்த உன் பாசம்..' பாடலை பாடி அசத்திய அபர்ணா பாலமுரளி !

Aparna balamurali sings kaiyile aagaasam song video getting viral

தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் 18 வயது முதல் நடிக்கத் தொடங்கியவர் நடிகை அபர்ணா பாலமுரளி. பொம்மியாக சூரரை போற்று திரைப்படத்தில் சூர்யா ஜோடியாக மக்கள் மனதில் பெரிதும் நின்றவர். ரசிகர்கள் பலரும் இந்த மாதிரி மனைவி கிடைத்தால் எதையும் சாதிக்கலாம் என மீம்ஸ் போடும் வண்ணம் இவரது கதாபாத்திரம் ஆணித்தரமாக அமைந்தது.

Aparna balamurali sings kaiyile aagaasam song video getting viral

மலையாள மொழியில் 3 திரைப்படங்களில் நடித்த இவர், பிறகு 8 தோட்டாக்கள் திரைப்படத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து, அப்படம் பெரிதும் நன்றாக அமையாத காரணத்தினால் மலையாள மொழியில் தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார். சர்வம் தாள மயம், சூரரை போற்று, தீதும் நன்றும், வீட்ல விசேஷம் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Aparna balamurali sings kaiyile aagaasam song video getting viral

சில குறும்படங்கள் மற்றும் மியூசிக் ஆல்பம்களில் நடித்துள்ளார். தற்போது, தமிழில் 2 திரைப்படங்களில் மற்றும் மலையாளத்தில் சில திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். சினிமாவில் சாதிக்க வேண்டும் என தொடர்ந்து போராடி வந்த இவர், சூரரைப் போற்று திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றுள்ளார்.

Aparna balamurali sings kaiyile aagaasam song video getting viral

2020ம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், காளி வெங்கட், ஊர்வசி, கேகே, விவேக் பிரசன்னா நடிப்பில் வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. பெரிய எதிர்பார்பிற்கு இடையே நேரடியாக OTT-யில் வெளியான சூரரை போற்று, மக்களிடையே பேரதரவை பெற்றது.

Aparna balamurali sings kaiyile aagaasam song video getting viral

68வது தேசிய விருது பட்டியலில் சூரரை போற்று படத்திற்கு சிறந்த நடிகர், நடிகை, திரைப்படம், திரைக்கதை, பின்னணி இசை என 5 விருதுகளை குவித்தது. சிறந்த நடிகராக சூர்யாவும், சிறந்த நடிகையாக அபர்ணா பாலமுரளியும், சிறந்த பின்னணி இசைக்காக ஜிவி பிரகாஷும், சிறந்த திரைக்கதைக்காக சுதா கொங்கராவும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இதுதவிர சிறந்த படத்துக்கான விருதையும் சூரரைப் போற்று தட்டித்தூக்கி உள்ளது.

Aparna balamurali sings kaiyile aagaasam song video getting viral

நல்ல நடிகை என்பதை மட்டும் அல்லாது நல்ல பாடகி என்பதையும் நிரூபித்துள்ளார். அண்மையில், இவர் அளித்த பேட்டி ஒன்றில் சூரரைப்போற்று படத்தில் இடம்பெற்ற கையிலே ஆகாசம் என்ற பாடலை பாடி அசத்தியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

Share this post