Annapoorani First Look: லாஸ்லியா - லிஜோமோல் நடிப்பில் 'அன்னபூரணி'.. வெளியான ஃபர்ஸ்ட் லுக்!

annapoorani first look poster getting viral starring losliya and lijomol jose

Komala Hari Pictures & One Drop Ocean Pictures நிறுவனங்களின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் லயோனல் ஜோஸ்வா இயக்கத்தில், லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா, மெட்ராஸ் ஹரிகிருஷ்ணன் நடிப்பில் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “அன்னபூரணி”.

annapoorani first look poster getting viral starring losliya and lijomol jose

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் & பொன்னியின் செல்வன் பட நடிகர் ஜெயம் ரவி ஆகியோர் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டனர். மாறுபட்ட கதைக்களத்தை வெளிப்படுத்தும்படியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

annapoorani first look poster getting viral starring losliya and lijomol jose

குடும்ப சூழ்நிலைக்குள் வாழும் ‘பூரணி’ , குடும்ப அமைப்பிற்கு வெளியே சுதந்திரமாய் வாழும் ‘அனா’ ஆகிய இருவரின் பயணமே இந்தப்படம். பெண்கள் குடும்ப அமைப்பிற்குள் அனுபவிக்கும் சிரமங்களை, கருத்து சொல்லும்படியாக இல்லாமல் ரசிகர்களுக்கு பிடிக்கும் வண்ணம், ஒரு மாறுபட்ட திரில்லர் படமாக அமைந்துள்ளது.

annapoorani first look poster getting viral starring losliya and lijomol jose

பாடலாசிரியர் யுகபாரதி இப்படத்தின் பாடல்களையும், படத்திற்கான வசனங்களையும் எழுதியுள்ளார். 96 புகழ் கோவிந்த் வஸந்தா இசையமைத்துள்ளார். ஜெயபீம் படத்தின் மூலம் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய லிஜோ மோல் ஜோஸ், பிக்பாஸ் லாஸ்லியா ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, மெட்ராஸ் ஹரிகிருஷ்ணன், தோழர் ராஜீவ் காந்தி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

annapoorani first look poster getting viral starring losliya and lijomol jose

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில், இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்படத்தின் இசை உரிமையினை TIPS MUSIC பெற்றுள்ளது. படத்தின் ட்ரைலர், இசை மற்றும் திரை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

Share this post