சமந்தாவுக்கு டஃப் கொடுத்த அஞ்சலி.. ஐட்டம் பாடலுக்கு டான்ஸ்.. வெளியான அப்டேட் !

Anjali to perform item song in upcoming telugu film

இயக்குனர் ராம் இயக்கத்தில் ஜீவா ஜோடியாக 2007ம் ஆண்டு வெளியான ‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அதன் பின்னர், இவர் நடித்த ‘அங்காடி தெரு’ படம் ஹிட் அடித்ததை தொடர்ந்து, நடிகை அஞ்சலிக்கு அடுத்தடுத்து நல்ல வரவேற்பு கிடைக்கவே, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, ஆயுதம் செய்வோம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

Anjali to perform item song in upcoming telugu film

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கின. தமிழில், சுமார் 20 திரைப்படங்கள் வரை நடித்த அஞ்சலி திடீரென நடிப்பை ஓரம் கட்டிவிட்டு ஐதராபாத்’ல் செட்டில் ஆனார். சிறிய இடைவெளிக்கு பின்னர் சிங்கம் 2 படத்தில் ஒரு பாட்டிற்கு மட்டும் குத்தாட்டம் போட்டார்.

Anjali to perform item song in upcoming telugu film

பின்னர், நடிப்பில் ஆர்வம் காட்ட தொடங்கிய அஞ்சலி, நாடோடிகள் 2 படத்தில் நடித்தார். தமிழ் திரையுலகில் வெப்சீரிஸ்களும் அதிக அளவில் வெளிவர தொடங்கிய நிலையில், ‘பாவக்கதைகள்’ ‘நிசப்தம்’, ‘நவரசா’ உள்ளிட்ட சீரிஸ்களில் நடித்து வந்த நிலையில், அடுத்தடுத்து படங்களிலும் கமிட் ஆகியுள்ளார்.

Anjali to perform item song in upcoming telugu film

இந்நிலையில், சமூக வலைதள பக்கங்களில், போட்டோக்கள், வீடியோக்கள் என அப்லோட் செய்து வருகிறார். தற்போது, ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் RC15 திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

Anjali to perform item song in upcoming telugu film

மேலும், தெலுங்கு படம் ஒன்றில் இடம் பெறும் ஐட்டம் சாங்கிற்கு கவர்ச்சி நடனம் ஆடி உள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் நிதின் நடிப்பில் உருவாகி வரும் ‘மச்சேர்லா நியோஜகவர்கம்’ என்ற படத்தில் நடிகை அஞ்சலி கவர்ச்சி நடனம் ஆடி உள்ளார். இதற்கான போஸ்டர் ஒன்றும் வெளியாகி உள்ளது.

Anjali to perform item song in upcoming telugu film

புஷ்பா படத்தில் நடிகை சமந்தா அணிந்திருந்தது போல் படுகவர்ச்சியான உடை அணிந்தபடி போஸ் கொடுத்துள்ளார் அஞ்சலி. இந்த பாடல் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Share this post